states

சாலையோர வியாபாரிகளை துன்புறுத்தாதீர்: புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் வலியுறத்தல்

புதுச்சேரி, அக். 7- பண்டிகை காலத்தில் சாலையோர வியா பாரிகளை துன்புறுத்து வதை புதுச்சேரி அரசு உடன டியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆட்சி அதி காரத்திற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியும் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி இருந்தும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த எந்த திட்டத்தையும் கொண்டு வராத நிலை யில், நேர்மையாக வாழ வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படை யில் சுயமாக வேலை வாய்ப்பை உருவாக்கி சாலை ஓரங்களில் ஏதேனும் ஒரு வேலை செய்து பிழைக்கும் சாலை யோர வியாபாரிகள், சிறு வணிகர்கள், தொழி லாளர்களை குறிவைத்து புதுச்சேரி ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வரு வதை வன்மையாக கண்டிக்கிறோம். புதுச்சேரியை ஒழுங்கு படுத்துகிறோம் என்ற பெயரில் புல்டோசர்கள், காவல்துறை புடை சூழ அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழி இல்லாத விளிம்பு நிலை மக்களை அச்சுறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை நாசப் படுத்தி வருகின்றனர். வாங்கும் சம்பளத்திற்கும், சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத வகையில் வரு மானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ள புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் இது போன்ற இரக்கமற்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சாலை யோர வியாபாரிகளுக்கு என்று ஒரு திட்டத்தை வகுத்ததுடன், அதனை மாநில அரசுகள் நிறை வேற்ற வேண்டும் என்று தலைமைச் செய லாளர்களுக்கு உத்தரவிட்ட னர்.

 நாடு முழுவதும் உள்ள சுமார் 4 கோடிக்கும் மேற்பட்ட சாலை யோர வியாபாரிகள், தொழி லாளர்களின் நலன் சம்பந்தமாக பல்வேறு நலத்திட்டங்களை உரு வாக்கவும், குறிப்பாக சாலையோர வியாபாரி களுக்கு உதவி செய்யும் வகையில் மின் இணைப்பு,  குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருதல், நிழற்குடைகளை அமைத்தல், வங்கிக் கடன் உதவி செய்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.  இதில் ஒன்றைக் கூட புதுச்சேரி ஆட்சியாளர்கள் நிறை வேற்றாமல் எதற்கெடுத்தாலும் ஆக்கிர மிப்பு அகற்றுதல் என்ற பெயரில் அவர்க ளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவதை வாடிக்கை யாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்றால் எண்ணற்ற துயரங்களைக் கண்ட சாலையோர வியா பாரிகள் தற்போது பண்டிகை நெருங்கி வரும் காலங்களில் இது போன்ற அரசின் நடவடிக்கை சாலையோர வியா பாரிகளின் உயிரை பறிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக சாலை யோர வியா பாரிகளை துன்புறுத்தும் நடவடிக்கை களை கைவிட வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ந்தால், அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;