states

img

சிபிஎம் நடைபயணம்: உற்சாக வரவேற்பு

புதுச்சேரி, செப். 22- புதுச்சேரி மாநில உரிமைகளை மீட்கவும், புதுச்சேரி மக்கள் நலனை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 200 கிலோ மீட்டர் நடை பயணம் செப்டம்பர் 20 அன்று தொடங்கியது. வருகிற 26 ஆம் தேதி நிறை வடைகிறது. இந்த பயணத்தின் 3 வது நாள் பிச்சாரம் திருக்கனூர் கூனிச்சம்பட்டில் துவங்கி யது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் இரகு.அன்புமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  சுதாசுந்தரராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மூத்த தோழர் நில வழகன், மாநில செயற் குழு உறுப்பினர்கள் ராமச் சந்திரன்,தமிழ்ச் செல்வன்,சீனூவாசன், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, சத்தியா, மாநிலக்குழு உறுப்பி னர்கள் சங்கர், உலக நாதன், கலியன், சர வணன், இளவரசி, சஞ்செய், கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், முத்து, கந்த நாதன், அமிர்தவள்ளி உட்பட திரளானோர் நடை பயணத்தில் பங்கேற்றனர். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதியில் உள்ள மருத்துவமணையில் தரத்தை உயர்த்த வேண்டும்.கொம்யூன் முழுவதும் ரேசன் கடைகளை திறக்க வேண்டும். கிராமத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டதை அமலாக்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டு படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகள் நடைபயணத்தில் வலி யுறுத்தப்பட்டன. திருக்கனூரில் துவங்கிய நடைபயணம் மண்ணாடிப்பட்டு, வாதானூர், மதகடிப்பட்டு திருபுவனை ஆகிய பகுதி களை கடந்து திரு வாண்டார் கோயில் பகுதி யில் பொதுக்கூட்டத்து டன் நிறைவு பெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் திருக்கனூர் நகரச் செயலாளர் ராஜா முகமது தலைமையில் நடை பயணத்தில் பங்கேற்ற தலை வர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பளித்த னர்.

;