states

புதுச்சேரிக்கு தலைமை செயலாளர் நியமனம்

புதுச்சேரி, ஏப்.20- புதுச்சேரி தலைமைச் செயலாளராக 2017ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் அஸ்வினிகுமார். இவர் கேபினட், உள்துறை, செயலாக்கத் துறை உட்பட பல முக்கியத் துறைகளை கவனித்து வந்தார். 3 ஆண்டு களுக்கு ஒரு முறை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணி யிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அஸ்வினிகுமார் 3 ஆண்டுகள் கடந்தும் பணியிட மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து புதுச்சேரியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்  4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டது. புதுச்சேரி தலைமைச் செய லாளராக பணியாற்றி வரும் அஸ்வனி குமார் தில்லிக்கும், அருணாச்சலப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ்வர்மா புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், முன்னாள் முதல்வர் நாராயண சாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலின்போது, தலைமைச் செயலாள ராக இருந்த அஸ்வனி குமார் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதே தலைமைச் செயலர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் எனக் கருதப்பட்டது. ஆனால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. புதிதாக அமைந்த என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு அனுப்பும் முக்கிய கோப்பு களை, பல்வேறு கேள்வி எழுப்பி திருப்பி அனுப்புவதாக தலைமைச் செயலர் மீது குற்றச்சாட்டும் இருந்து வந்தது. 5  ஆண்டுகளுக்குப் பிறகு  அஸ்வினிகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.