states

img

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, பீகார் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை அக்டோபர் 10-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 17-ஆம் தேதி, வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 20-ஆம் தேதி, வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 23-ஆம் தேதி கடைசி நாளாகும்.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்றும், அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நவம்பர் 16 க்குள் நிறைவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.