states

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி

லூதியானா, பிப்.6- பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். “பஞ்சாப் மக்கள் எங்களுக்கு ‘கரீப் கர்’ (ஏழை குடும்பம்) முதல்வர் தேவை என்று கூறி னார்கள் என்றார் ராகுல்காந்தி. கட்சியின் முதல் வர் வேட்பாளராக  பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொண்டர்களிடமிருந்து பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என பொதுமக்களிடம் கருத்துக்கேட்டு முடிவெடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.