states

img

நாகாலாந்தில் பழங்குடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: தில்லியில் விரையும் நாகாலாந்து முதலமைச்சர்

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் பழங்குடிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து, அம்மாவட்டத்தில் இணையசேவையும் குறுஞ்செய்தி சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

சனியன்று (டிசம்பர்-4) மாலை, நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பணி முடித்து, டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடிகள் 13 பேரை இராணுவம், தீவிரவாதிகளென கருதி சுட்டுக்கொன்றுள்ளது. இப்படுகொலைக்கு இராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

இச்சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக, நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஓடிங்கில் பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்த துரதிஷ்டமான சம்பவம் வன்மையாக கண்டித்தக்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு இக்கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்தின்படி நீதி வழங்கும். அனைவரிடமும் அமைதிக்காக வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக, தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் நெய்பியு ரியோ, மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இச்சம்பவம் குறித்து அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும்.எங்கள் சொந்த நிலத்தில் பொதுமக்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ பாதுகாப்பாக இல்லாதபோது உள்துறை அமைச்சகம் என்ன செய்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

;