states

img

நாகாலாந்து படுகொலை விவகாரம்: நீதி கிடைக்கும் வரை ராணுவம் கென்யாக்ஸ் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்-சமூக செயல்பாட்டு அமைப்புகள்

நாகாலாந்தில், ராணுவத்தால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரை , கொன்யாக்ஸ் பகுதிக்குள் ராணுவப்படையின் பேரணியையும், ரோந்துப் படைகளின் பேரணிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று சமூக செயற்பாட்டு அமைப்புகள் அறிவித்துள்ளன.

டிசம்பர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ராணுவப்படைகளுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்ற அறிவிப்பை கொன்யாக்ஸ்(பழங்குடியினர்) தெரிவித்துள்ளனர்.

கொன்யாக் பழங்குடிகளின் புதிய விதிமுறைகளின்படி, மோன் மாவட்டத்திற்குள் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி அனுமதிக்கப்படாது. கொன்யாக் இளைஞர்களும் அத்தகைய ஆட்சேர்ப்பு பேரணியில் பங்கேற்கக் கூடாது.

கொன்யாக் பகுதிகளுக்குள் ராணுவ முகாம்களை அமைக்கும் பொருட்டு கையெழுத்திடப்பட்ட நில ஒப்பந்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ராணுவத்துடனான அனைத்து வகையான உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்து, அசாமில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் மருத்துவச்செலவிற்கான முழுப் பொறுப்பையும் நாகாலாந்து மாநில அரசே ஏற்க வேண்டும். அவர்கள் சாட்சிகள் எனவே மாநில அரசு உரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

;