தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 17 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், திங்களன்று கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்த வெளி வாகனத்தில் மிரியாலகுடா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜூலகந்தி ரங்கா ரெட்டிக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.