states

img

புரட்சிகர பாடகர் கத்தார் காலமானார்

ஹைதராபாத், ஆக.6- தெலுங்கானாவின் புரட்சிகரப் பாடகர்  ‘கதார்’ என அழைக்கப்படும் கும்மாடி விட்டல் ராவ் (74) இதய நோய் பிரச்சனை யால் ஞாயிறன்று காலமானார்.  இதய நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  ஜூலை 20, 2023 அன்று அனுமதிக்கப்பட்ட கதாருக்கு ஆகஸ்ட் 3 அன்று பைபாஸ் அறுவை சிகிச்சை  செய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டார். இருப்பினும் நுரையீரல் மற்றும் சிறுநீர் தொற்று பிரச்சனைகளுடன் உள்நோயா ளியாகவே இருந்த கதார் சிகிச்சை பலனின்றி காலமானார். கதார் நக்சலைட் இயக்கத்தில் செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் கலாச்சார பிரிவான ஜன நாட்டிய மண்டலியை நிறுவி புரட்சிகரப் பாடல்களை பாடிவந்தார். சமீபத்தில் ராகுல் காந்தியின் “ஒற்றுமை இந்தியா” யாத்திரையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.