தெலுங்கானா மாநிலம் திண்டக் கல் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமான பயிற்சி அகாடமி உள் ளது. திங்களன்று காலை 8.55 மணி அளவில் வழக்க மான பயிற்சிக் காக சென்ற பிலட் டஸ் பிசி 7 எம்கே 2 ரக விமானம் கட் டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் விமா னத்தில் பயணித்த இளம் விமானி மற்றும் மூத்த பயிற்றுநர் என 2 விமானிகள் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணங்களை அறிய விமானப்படை உயரதிகாரிகள் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.