உள்ளாட்சித் தேர்தலில் காஷ்மீர் பிரிவினைக்கு எதி ராக மக்கள் வாக்களித்தது ஏன்? லடாக் யூனியன் பிரதேசம் செவ்வாய்க் கிரகத்தைப் போல மிக வும் சிக்கலான நிலப்பரப்பைக் கொண்டது. பல்வேறு மத, கலாச்சார, அரசியல் மற்றும் மொழியியல் அடிப்படையில் அடுக்கடுக்காக பரந்து விரிந்த மக்கள் தொகையை கொண்ட ஒரு பகுதி. புத்த மதத்தினர் பெரும்பான்மை யாக வாழும் லே மற்றும் முஸ்லிம் கள் பெரும்பான்மையாக வாழும் கார்கிலையும் அது உள்ளடக்கியது. லே மற்றும் கார்கில் ரெட்டை மலைப்பகுதி கவுன்சில்களில் ஒன் றான லடாக் தன்னாட்சி மற்றும் மலை மேம்பாட்டு கவுன்சில்மூ கார்கிலுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் முடிவுகள் வெளியானது . ஆழமான அரசியல் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையையும் அது உணர்த்துகின்றது. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு (2019-ல்) பறித்த பிறகு அங்கு நடப்பவை களை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முன்பாக, குளிர் மலை பகுதியான லடாக்கின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை அம்சங்களையும் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். லடாக்கின் பரப்பளவு 59 ஆயிரம் சதுர கிலோமீட்டர் .1,483 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள தில்லி யை விட 40 மடங்கு பெரியது. 2011 மக்கள் தொகை கணக்கெடு ப்பின்படி 2.74 லட்சம் பேர் வசிக் கிறார்கள். 27.3 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட தில்லி யுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. இங்குள்ள கிராமங்களுக்கி டையே உள்ள தூரம் சுமார் 20 முதல் 80 கிலோமீட்டர் ஆகும்.
பாஜகவிற்கு படுதோல்வி
74 ,026 வாக்காளர்களைக் கொண்ட இந்த கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் சுமார் 77.61% பேர் வாக்களித்தனர். 2019க்கு பிறகு முதன்முறையாக நடந்த இந்த தேர்தலில் காஷ்மீரை தள மாகக் கொண்ட அரசியல் கட்சி யான தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களை வென்று பெரும் பான்மையை பிடித்தது. காங்கிரஸ் 10,பாஜக 2, சுயேச்சை 2 இடங் களில் வெற்றி பெற்றது. ஒரு காலத்தில் புகழ்பெற்ற பட்டுப்பாதையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது என்பது பல நூற்றாண்டுகளாக பழமையான உறவு கொண்டிருந்த காஷ்மீரில் இருந்து அதனை துண்டித்த வலியையும் மனவேத னையையும் அந்த மக்களுக்கு ஏற்படுத்துவதாகும். வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தேர்தல் முடிவுகள்வெளிப்படுத்தும் இந்த சோகமான உண்மை மிகவும் முக்கியமானதாகும்.
முதல் காதல் காஷ்மீர் மீதுதான்!
உலகின் மிகவும் குளிரான (மைனஸ் 40 டிகிரி செண்டி கிரேட்) பகுதிகளில் ஒன்றான கார்கில் திராஸ் பகுதியில் உள்ள வாக்காளர் களின் முதல் விருப்பம் காஷ்மீர் மட்டும்தான். ஸ்ரீ நகரிலிருந்து திராஸ் செல்லும் பாதை கடும் பனிப்பொழி வுகளால் வழுக்கல் நிறைந்ததாகும். அதில் பயணம் செய்வோர் உயிரை யும் இழக்க நேரிடும். அங்கு வசிக்கும் மக்களுக்கு கல்வியை புகட்டிய பள்ளிகள் காஷ்மீர் வாசி களால் தான் நடத்தப்பட்டன. திராஸ் மற்றும் காஷ்மீர் வாசிகள் இடையே திருமணங்களும் இயல்பா கவே நடைபெற்றன. காஷ்மீரிகளின் செல்வாக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளின் கட்டி டக்கலையில் தெரியும்.மெலிந்த தக ரத்தாலான சாய்வு கூரை மற்றும் மர ஜன்னல்களைக் கொண்டது. கார்கிலின் புஷ்கோ பள்ளத்தாக்கில் ஷைனா மொழி பேசும் மக்களும் காஷ்மீரின் குரேஸ் பள்ளத்தாக்கு வாசிகளும் இயல்பாகவே நல்லுறவை கொண்ட வர்கள். ஷைனா மொழி இந்தியமூ ஆரிய மொழிகளில் ஒன்று. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜிட் பால்டிஸ்தானிலும் வழக்கு மொழி யாக உள்ளது.
அரசியலைத் தீர்மானிப்பது கட்சிகள் அல்ல!
கார்கிலின் அரசியல், கட்சிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. இமாம் கொமேனி நினைவு அறக்கட்ட ளை மற்றும் கார்கில் இஸ்லாமியப் பள்ளி என்ற இரண்டு அமைப்பு கள் தீர்மானிக்கின்றன. 1979 ஆம் ஆண்டில் ஷியா தலைவர் ருஹல்லா கொமேனி தலைமை யிலான ஈரானிய புரட்சியின் நேரடி வழித்தோன்றல் தான் 1980களின் பிற்பகுதிகளில் தோன்றிய கொமேனி நினைவு அறக்கட்டளை. இது பாரம்பரியமாக காங்கிரசை ஆதரித்தது. 1950 களில் இருந்தே இஸ்லாமிய மதப் பள்ளியை தேசிய மாநாட்டு கட்சியும் ஆதரித்து வந்தது.இரண்டுக்கும் இடையிலே கருத்து வேறுபாடுகள் நிலவின.ஆனால் ஜம்மு - காஷ்மீரை பிரிப்பதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுத்தன.
விவரிக்க முடியாத வலி!
உண்மையில் காஷ்மீர் பிரிவினை க்கு எதிராகவே கார்கில் வாக்கா ளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்த னர். மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் இதே மனநிலை தான் நிலவி வருகிறது. திராஸில் வசிக்கும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் ஹாஜி அப்துல் கயூன் இப்படி குறிப்பிடுகிறார்: ஒன்றிய அரசு 2019- ல் நடத்திய ஜம்மு- காஷ்மீர் பிரிவினை, எங்களுக்கு ஏற்படுத்திய வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை .ஒரு அதிகாரியின் பதவியை பறி த்து அவரை ஏவல் ஆளாக மாற்றி னால் அதை அவர் எப்படி உணர்வார்? அந்த வலி தான் எங்களுக்கும். கார்கிலின் தனித்துவ அடை யாளம், காஷ்மீருடன் இணைப்பு இரண்டின் அடிப்படையில் தான் கார்கிலின் தேர்தல் களம் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய மாநாட்டு கட்சியும் அப்படித்தான் தேர்தலில் பங்கேற்றது. மதச்சார் பற்ற நம்பிக்கையின் அடிப்படை யிலான அரசியலை காங்கிரஸும் உயிர்ப்போடு வைத்திருந்தது. வளர்ச்சி வளர்ச்சி என கூவினா லும் கூட கடந்த நான்கு ஆண்டு களாக பாஜக பின்பற்றிய குறுகிய அடையாள அரசியல் காரணங் களால் கார்கில் மக்கள் அந்தக் கட்சியை அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் அழுத்தமாக உணர்த்துகின்றன.
- பீர்ஸதா ஆஷிக்
தி ஹிந்து 13-10-23.
தமிழில்: கடலூர் சுகுமாரன்