states

மருத்துவ சிகிச்சைக்கான செலவினங்கள் திருப்பித்தருவது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன?

புதுதில்லி, ஜூலை 25- புதுச்சேரியில் உள்ள ஜவஹர் லால் நேரு முதுகலை மருத்துவக் கல்லூரி, புதுதில்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (‘எய்ம்ஸ்’) ஆகிய வற்றிலும் கட்டணம் இல்லா சிகிச்சை பெறலாம் என்றும் இந்நிறு வனங்களில் சிகிச்சை பெற CGHS  பரிந்துரை தேவையில்லை என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத்தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள் விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வியாழன் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது மக்கள வையில் பி.ஆர். நடராஜன், மருத் துவ சிகிச்சை ஒன்றிய அரசின் சுகா தாரத் திட்டத்தின் (CGHS) கீழ், பய னாளர்களின் செலவினங்கள் திரும்பத்தரப்படுவது குறித்து ஒன்றிய அரசின் நிலை என்ன என்  றும், பயனாளர்களுக்குக் கட்டணம்  இல்லாமல் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனைகள் குறித்து  அரசு தெரிவித்துள்ளதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன  என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத்தலை வர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந் தார். இதற்கு எழுத்துமூலம் பதில ளித்த  ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்  சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறி யதாவது:

ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் பட்டியலில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு நிறு வனங்களில் சிகிச்சை நடைமுறை கள்/சேவைகள் கடனாக வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுபவர்கள், நாடாளுமன்ற முன்னாள்/இந்நாள்  உறுப்பினர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், CGHS ஊழியர்கள் மற்றும்  CGHS அட்டை வைத்துள்ளவர்கள் ஆகியோரிடம் எவ்விதக் கட்டண மும் கோரப்பட மாட்டாது. கட்டண ரசீதுகள், சம்பந்தப்பட்ட நகரில் உள்ள ரசீதுகள் சரிசெய்யும் முகவை CGHS இணை இயக்குநர்/கூடுதல் இணை இயக்குநர் ஆகி யோரின் அலுவலகங்களில் சமர்ப் பிக்கப்படும். மேலும் புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்  துவக் கல்லூரி, புதுதில்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் அமைந்  துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (‘எய்ம்ஸ்’) ஆகியவற்றிலும் கட்ட ணம் இல்லா சிகிச்சை வழங்கு வதற்கு அரசு கையெழுத்திட்டுள ளது. இந்நிறுவனங்களில் சிகிச்சை  பெற CGHS பரிந்துரை தேவை யில்லை இவ்வாறு அமைச்சர் பதிலளித் துள்ளார்.               (ந.நி)