“சனாதன தர்மம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை ஒன்றிய பாஜக அமைச்சர் அமித் ஷா திரித்து, எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி இந்து மதத்தை வெறுக்கிறது எனக் கூறியுள்ளார். சனாதன தர்மம் பிறப்பு அடிப்படையிலான வர்ணாசிரமக் கொள்கையை போற்றுகிறதா? இல்லையா? நீங்கள் (அமித் ஷா) சாதி அமைப்பை ஆதரிக்கிறீர்களா? பெண்கள் மற்றும் தலித்து களை இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதியின் வசனங் களை ஆதரிக்கிறீர்களா? வயது வந்த பெண்ணுக்கு விருப்பமான ஆணை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை ஆதரிக்கிறீர்களா? அல்லது மனு ஸ்மிருதியால் விதிக்கப்படும் கொடூரமான தண்ட னையை ஆதரிக்கிறீர்களா? இதற்கு முதலில் அமித் ஷா பதிலளிக்க வேண்டும். “விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நாட்டில் தலித் மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கொடு மைகளை கையாள்வதில் உங்கள் (பாஜக) அரசாங்கத்தின் தோல்வியிலிருந்து கவனத்தை திசை திருப்புவதுதான் உங்களது பணியாக உள்ளது”.
இராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதிலிருந்து...