states

img

பீகாரில் பாஜகவுக்கு பெரும்பான்மை தாருங்கள்!

பூர்னியா, (பீகார்) செப்.23- பீகார் மாநிலம் பூர்னியா நகரில் உள்ள ரங்பூமி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா 2024-மக்களவைத் தேர்தல் எங்களை காப்பாற்றுங்கள் என புலம்பினார்.  ஆகஸ்ட் மாதம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான ஜனதா தளம்- பாஜகவுடனான உறவை முறித்துக்  கொண்ட பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித் ஷா  வெள்ளியன்று வடகிழக்கு பீகாரின் சீமாஞ்சல் (எல்லை) பகுதியில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.  அப்போது அமித்ஷா உச்ச பட்சமாக தனது கோபத்தையும் புலம்பலை யும் வெளிப்படுத்தினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் (நிதிஷ்குமார்) கட்சிக்கு குறைவான இடங்கள் கிடைத்தது. இருந்தாலும் மாநிலத்தின் முதலமைச்சராவதற்கு  உங்களுக்கு வாய்ப்பளித்தது பிரதமர் மோடி யின் பெரிய இதயம் தான் எனக் கூறிக்கொண்ட அமித்ஷா பீகாரில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் கூறிக்கொண்டார்.  

மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக  ரூ.1.35 லட்சம் கோடி  வழங்குவதாக பிரதமர் மோடி முன்பு வாக்குறுதி அளித்ததையும் குறிப்பிட்டார். நாட்டின் அடுத்த பிரதமராக மக்கள் யாரைப்  பார்க்க விரும்புகிறார்கள்  நரேந்திர மோடியா? அல்லது ராகுல் காந்தியா? என கேள்வி எழுப்பினார். தாமே  பீகாரில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு முழுப் பெரும்பான்மை வழங்க வேண்டும் என்ற தனது ஆசையையும் கூறினார்.  வடகிழக்கு பீகாரின் சீமாஞ்சல் (எல்லை) பகுதி, பூர்னியா, கிஷன்கஞ்ச், அராரியா மற்றும் கதிஹார் ஆகிய நான்கு மாவட்டங்களில் சுமார் 47 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர், கிஷன்கஞ்சில் மட்டும் 67 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர்.  நான்கு மாவட்டங்கள் 24 சட்டமன்றத் தொகுதிகளையும், நான்கு மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியதாகும். இதில் பாஜக எட்டு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலா ஐந்து இடங்களையும் பெற்றது. ஜேடியு நான்கு இடங்களையும் பெற்றன. 2019- மக்களவைத் தேர்தலில் பாஜக அராரியா-வில்  மட்டுமே வெற்றி பெற்றது. பூர்னியா மற்றும் கதிஹார் ஆகிய இரண்டு இடங்களில் ஜேடியூ வெற்றி பெற்றது மற்றும் கிஷன்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தது.