வர்த்தகப் போர் இந்திய பொருளாதர வளர்ச்சி குறையும்
சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
அமெரிக்காவின் வரிவிதிப்பால் துவங்கப்பட்டுள்ள வர்த்தகப் போரின் காரணமாக இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி கணிக்கப் பட்ட அளவை விட குறையும் என சர்வ தேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2026 ஆம் நிதி ஆண்டு (2025-26) 2027 ஆம் நிதி ஆண்டு என (2026-27) இரு நிதியாண்டிலும் முறையே வளர்ச்சிக் கணிப்பு 30 அடிப்படை புள்ளிகள் (bps) மற்றும் 20 அடிப்படை புள்ளிகளாக குறைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக் கையின்படி, வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக நிச்சய மற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்ப டையில் முதலில் 2025-26 நிதியாண்டில் 6.5 சதவீதம் என்ற வளர்ச்சி கணிக்கப் பட்டது. இப்போது அதில் 30அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதியாண்டில் வளர்ச்சியின் அளவு 6.2 சதவீதமாகவே இருக்கும். மேலும் அடுத்த நிதியாண்டில் (2026-27) 20 அடிப்படை புள்ளிகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வளர்ச்சி 6.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகப் பதற் றங்கள், நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் பார்த்ததை விட மெதுவான நுகர்வோர் வளர்ச்சி ஆகியவற்றில் இருந்து கணிக் கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே தீவிரம டைந்துள்ள பணவீக்கம், வாங்கும் சக்தி குறைவு, வேலையின்மை ஆகிய வற்றின் காரணமாக கிராமப்புறங்களில் மிகமோசமான பொருளாதாரச் சூழல் உள்ள நிலையில் வரும் நிதியாண்டு களில் நெருக்கடி இன்னும் அதிகரிக்க லாம் என்ற அச்சம் நிலவுகிறது.