states

img

சஸ்பெண்ட் செய்துவிடுவேன் எனவும் மிரட்டல் போலீசாரை சரமாரியாக திட்டிய பீகார் பாஜக அமைச்சர்!

பாட்னா, டிச. 3 - தனது காரைத் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறி, பீகார் பாஜக அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா போலீசாரை கடுமை யாகத் திட்டித் தீர்த்தது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பாஜக-வைச் சேர்ந்த ஜிவேஷ் மிஸ்ரா, மாநிலத்தின் தொழிலா ளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.  

இந்நிலையில், அவர் சட்ட மன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றபோது சட்டமன்றத்தின் நுழைவு வாயி லில் போலீசார் அமைச்சரின் காரை தடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் கடும் ஆத்திர மடைந்த அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா, காரை விட்டு இறங்கி, போலீசாரை சரமாரியாக திட்டியுள்ளார்.  “அமைச்சரான எனது காரையே சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் காக்க வைப்பீர்களா?” என்று கேட்டது டன்,

தனது காரைத் தடுத்து நிறுத்திய காவலர்களை சஸ்பெண்ட் செய்யும் வரை சட்டமன்றத்தில் நுழைய மாட்டேன் எனவும் மிரட்டியுள்  ளார். “நான்தான் அரசாங்கம், என்னையே தடுத்து நிறுத்து கிறார்கள்” என்றும் கொந்தளி த்துள்ளார். செய்தியாளர்கள் சூழ்ந்திருக்கும்போதே அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.  அமைச்சரின் இந்த மிரட்டல்  சம்பவம் அடங்கிய வீடியோ  தற்போது சமூகவலைதளங்களி லும் பரவி கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு முன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னியுடனும், ஜிவேஷ் மிஸ்ரா இதேபோல தகராறில்  ஈடுபட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

;