மோடிக்கு ஐஐஎம் மாணவர்கள்- பேராசிரியர்கள் 183 பேர் கூட்டாக கடிதம்
புதுதில்லி, ஜன. 8 - உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார், தில்லி, ராய்பூர் என நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்துத்துவா அமைப்புக்கள் கூடி ‘தர்ம சன்சத்’ (‘Dharma Sansad’) என்ற பெயரில், கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை மூன்று நாட்களுக்கு மாநாடு நடத்தினர். இவற்றில் பேசிய ‘இந்துத்துவா’ சாமியார் களும், பாஜக தலைவர்களும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்தனர். “இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கும், இந்துக் களுக்கு மட்டுமான நாடாக உருவாக்கு வதற்கும் போர் நடத்துவோம்.
தேவைப் பட்டால் கொலையும் செய்வோம்” என்று கொக்கரித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதங் களைக் கிளப்பிய நிலையில், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் 76 பேர், தலைமை நீதிபதி என்.வி. ரமணா வுக்கு கடிதம் எழுதினர். இதே கோரிக்கையை முன்வைத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதிகளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதினர். அதைத்தொடர்ந்து தற்போது, பெங்க ளூரு மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் மாணவர் களும், பேராசிரியர்களும் கூட்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளனர். அதில் அவர்கள்கூறியிருப்பதாவது: “மாண்புமிகு பிரதமர் அவர்களே... அவரவர் மதத்தைக் கண்ணியத்துடன் - அச்ச மின்றி, வெட்கமின்றி கடைப்பிடிக்கும் உரிமை யை நமது அரசியலமைப்பு நமக்கு வழங்கு கிறது. ஆனால், நம் நாட்டில் இப்போது ஒரு அச்ச உணர்வு உள்ளது.
சமீப நாட்களில் தேவா லயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தண்டனையின்றி, உரிய சட்ட நடைமுறைக்கு பயப்படாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு நமது நாட்டில் அதிகரித்து வரும் சகிப்புத் தன்மையின்மை குறித்த உங்கள் மவுனம், நம் நாட்டின் பன்முகக் கலாச்சார கட்டமைப்பை மதிக்கும் அனைவருக்கும் வருத்தமளிக்கிறது. உங்களது மவுனம், வெறுப்பு நிறைந்த குரல்களுக்குத் தைரியம் அளித்து, நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது கவலை தருகிறது. இந்த பேச்சுக்களை நீங்கள் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவ்வாறு செய்தால் இத்தகைய பேச்சும், போக்கும் நிற்கும். மாறாக, இனியும் அமைதி யாக இருந்தால், அது மதவாத சக்திகளை ஊக்குவிப்பதாகவே அமையும்.” இவ்வாறு அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ள இந்த கடிதத்தில் 183 பேர் கையொப்ப மிட்டுள்ளனர். பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் ஈஸ்வர் மூர்த்தி, கஞ்சன் முகர்ஜி, அர்பிட் எஸ், ராகுல் டி, சாய் யாயவரம், ராஜலக்ஷ்மி காமத், ரித்விக் பானர்ஜி, மனஸ்வினி பல்லா, அகமதாபாத் ஐஐஎம்-மில் பணியாற்றும் பேராசிரியர்கள் அங்கூர் சரின், நவ்தீப் மாத்தூர், ராகேஷ் பசந்த் உள்ளிட்ட 16 பேராசிரியர்களும் கையெழுத்திட்டுள்ளனர். “வெறுப்புக் குரல்கள் உரத்ததாக இருந்தால், அதற்கேற்ப பகுத்தறிவுக் குரல்களும் சத்தமாக இருக்க வேண்டும்” என்பதே தங்களின் இந்த கடிதத்தின் நோக்கம் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.