states

img

5 ஜி சேவை: பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுதில்லி, அக்.1- 5-ஜி (அலைக்கற்றை )சேவை தொடக்க விழா புதுதில்லி பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை  நடை பெற்றது.  இந்தியாவில் 5-ஜி ஏலம் கடந்த  ஜூலை 26- ஆம் தேதி இணையதளம் வாயிலாகத் தொடங்கி ஏழு நாட்க ளாக 40 சுற்றுகளாக நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்  வொர்க் ஆகிய நான்கு நிறுவனங் கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50  லட்சம் கோடிக்கு 5ஜி அலைக் கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலம் போனது. இதையடுத்து 5-ஜி சேவை தொடக்கவிழா புதுதில்லியில் சனிக்  கிழமை நடந்தது. பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இந்தச் சேவை முதற்கட்டமாக, ஆமதா பாத், சண்டிகர், புனே, குருகிராம், கொல்கட்டா, மும்பை, பெங்களூர், காந்திநகர், ஜாம்நகர், லக்னோ, ஐதராபாத், சென்னை ஆகிய நக ரங்களில் கிடைக்கும். தொடக்கவிழா நிகழ்வில், ஒன்  றிய  தகவல் தொடர்புத் துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 5-ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதில் தகவல் தொடர்  புத் துறை இணை அமைச்சர் தேவு சின் ஜெசிங்பாய், கார்ப்பரேட் முத லாளிகள் முகேஷ்அம்பானி, குமார  மங்கலம் பிர்லா, சுனில் பார்தி  மிட்டல் ஆகியோர் கலந்துகொண்ட னர். 

 5-ஜி அடுத்த இரண்டு ஆண்டு களில் படிப்படியாக நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும். 5-ஜி சேவை யின் மூலம் 2025-ஆம் ஆண்டில் அதன் பொருளாதாரம் 450 டாலர் பில்லியன்களை எட்டும் என எதிர்  பார்க்கப்படுகிறது. ‘5-ஜி அலைக்கற்றை புரட்சி  தொடர்வதற்கு ஒன்றிய அரசு தங்  களை கொள்கை ரீதியாக ஆத ரிக்கும் என நம்புவதாக குமார் மங்க லம் பிர்லா தெரிவித்தார். மேலும்  அவர் கூறுகையில், “தொழில்நுட் பத்தில் ஒரு தலைமுறை பாய்ச் சலை நாங்கள் காண்போம் என்பது உறுதி. இதற்கு அரசு தொலை நோக்குப் பார்வையுடன் ஒத்து ழைக்க வேண்டும். இது அரசின் கை யில்தான் உள்ளது” என்றார். ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் பேசிய சுனில் பார்தி மிட்டல், “தொழில் நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் தலைவரைப் பெற்றிருப்பது அதிர்ஷ் டம்” என்றதோடு 5-ஜி சேவை நாட்டு  மக்களுக்கு பல புதிய வாய்ப்பு் களை உருவாக்கும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “டிஜிட்டல் இந்தியா”வின் பார்வை  இல்லாமல் போயிருந்தால் தொற்று  நோய் பரவலின் போது நாங்கள்  மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி யிருப்போம்” பார்தி ஏர்டெல்  நிறுவ னம் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்  திற்குள் 5-ஜி சேவைகளை வழங் கும் என்றார்.  நிகழ்வில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி, 5-ஜி சேவை  21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்  பங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தும். எங்களாலும் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் சாதிக்க முடியும் என் பதை நிரூபிப்பதில் பெருமை கொள்கிறோம் என்றார். “5-ஜி சகாப்தத்தில் இந்தியா வின் பங்களிப்பை துரிதப்படுத்த பிர தமரின் உறுதிப்பாடு தான் காரணம்.   21-ஆம் நூற்றாண்டின் பிற தொழில்  நுட்பங்களின் முழுத் திறனையும் 5-ஜி வெளிப்படுத்தும். அதே  நேரத்தில் ஜியோ இந்த மாதத்திற் குள் 5-ஜி சேவைகளை வழங்கு வதற்கான அனைத்து ஏற்பாடு களையும் செய்துவருகிறது. நாங்  கள் தரத்துடன் மலிவு விலையில் 5-ஜி சேவைகளை வழங்குவோம். 2022-ஆம் ஆண்டு டிசம்பருக்குள்  நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக் கையும் ஜியோ சென்றடையும்” என்றார்.

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இன்று ஒரு இந்தியர் சரா சரியாக ஒரு மாதத்தில் 14 ஜிபி டேட்டாவை செலவிடுகிறார். 2014-ஆம் ஆண்டு இதன் விலை மாதம் ரூ.4,200 ஆக இருந்தது, இப்போது ரூ.125 முதல் ரூ.150 வரை மட்டுமே செலவாகிறது. இதன்  பொருள் ஏழை மற்றும் நடுத்தர வரு மானம் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.4,000 சேமிக்கி றார்கள், இது ஒரு சிறிய சாதனை அல்ல.  இன்று, நகர்ப்புறங்களில் உள்ள இணைய பயனர்களு டன் ஒப்பிடுகையில், கிராமப்புறங்க ளில் இணையத்தைப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது கவ னிக்கத்தக்கது, இப்போது ஆப்டி கல் ஃபைபர் பயன்படுத்தப்படுவ தால் பயனாளர்கள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. அனைவருக் கும் இணையம் என்ற இலக்கில்  எங்கள் அரசாங்கம் செயல்படுகி றது.  அதுவும் நாம் ஆத்மநிர்பராக இருக்கும்போது மட்டுமே அது மலி வாக கிடைக்கும் என்றார். அதே நேரத்தில் பிரதமர் மோடி, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங் களை மோடி கை கழுவிவிட்டார்.  பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதில் மும்முரமாக இருக்கிறது ஒன்றிய அரசு.  பொதுத்துறை நிறுவனங்களுக்கு 4-ஜி, 5-ஜி சேவைகளை வழங்க வில்லை. 4-ஜி-க்கான அலைக் கற்றை மட்டும் ஒதுக்கீடு செய்துள்  ளது. அதற்கான கருவிகள் வாங் கப்படவில்லை.

;