புதுதில்லி, அக். 4 - ஒன்றிய பாஜக அரசை கடுமையாக எதிர்த்து பேசி வரு பவரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான சஞ்சய் சிங்-கை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வீட்டிற்குள், புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென புகுந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு அமல்படுத்தியது. அப்போது, தனியார் நிறுவனங் களுக்கு மதுபான கடை உரிமம் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. இந்த குற்றச்சாட்டை விசா ரித்த அமலாக்கத்துறை, தில்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. இந்நிலையில், மதுபான கொள்கை வழக்கிலேயே சஞ்சய் சிங் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறியிருக்கும் அமலாக்கத்துறையினர், சஞ்சய் சிங்கை கைதும் செய்துள்ளனர். “அதானி விவகாரம் தொடர் பாக நாடாளுமன்றத்தில் சஞ்சய் சிங் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார். அதன் கார ணமாகவே தற்போது அவர் குறி வைக்கப்பட்டு, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரு கிறது. முன்பு நடந்த சோதனை களில் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இன்றும் எதுவும் கிடைக் காது. அமலாக்கத்துறை செவ்வா யன்று (அக்டோபர் 3)பத்திரிகை யாளர்களின் வீடுகளில் சோத னை மேற்கொண்டனர். புதனன்று (அக்டோபர் 4) சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடத்தினர்” என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா ஆகி யோர் கண்டனம் தெரிவித்துள்ள னர்.