“காங்கிரஸ் கட்சி எனது தாயைப் போன்றது. சோனியா காந்தி தியா கத்தின் உருவம். காங் கிரசுக்காகவும், சோனியா காந்திக்காகவும் எனது உயிரையும் கொடுப் பேன்” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ பாபுலால் நாகர் பேசியுள் ளார். அதேபோல, “நாட்டின் சுதந்திரத்திற் கும், சுதந்திரத்திற்கு பின் நாட்டின் வளர்ச்சி க்கும் காந்தி குடும்பத்தினர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நாங்கள் அனைவரும் காந்தி குடும்பத்தின் தலைமை யில் செயல்படுகிறோம்” என்று ராஜஸ்தான் மாநில மின்துறை இணையமைச்சர் பன்வர் சிங் பதியும் கூறியுள்ளார்.