states

img

எல்ஐசி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 44.34 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி, பிப். 10 - எல்ஐசி (Life Insurance Corporation - LIC) நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 2022 டிசம்பர் நில வரப்படி ரூ. 44 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு, ரூ. 40 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 10.54 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீடு பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதம்) நிதிநிலை முடிவுகளை வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில், எல்ஐசி-யின் நிகர லாபம் ரூ. 8 ஆயிரத்து 334  கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் எல்ஐசி 682 கோடியே 90 லட்சம் நிகர லாபம் ஈட்டி யிருந்தது. இது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ரூ. 15 ஆயிரத்து 952 கோடியாக இருந்தது. தற்போது அக்டோ பர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ. 8 ஆயிரத்து 334 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 235 கோடியை மட்டுமே நிகர லாபமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசியின் நிகர பிரீமியம் வருவாய், கடந்த இரண்டாவது காலா ண்டில் ரூ. 97 ஆயிரத்து 620 கோடியாக இருந்தது. இது தற்போது 14.5 சத விகிதம் அதிகரித்து ரூ. 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ. 8 ஆயிரத்து 748 கோடியே 55 லட்சமாக இருந்த முதல்  ஆண்டு பிரீமியம் அல்லது புதிய வணிக  பிரீமியம், தற்போது ரூ. 9 ஆயிரத்து 724 கோடியே 71 லட்சமாக அதி கரித்துள்ளது. ஒற்றைப் பிரீமியம் ரூ. 32 ஆயிரத்து 190 கோடியில் இருந்து 31 சத விகிதம் அதிகரித்து ரூ. 42 ஆயிரதத்து 117 கோடியாக உள்ளது. முதலீடுகள் மூலம் நிகர வரு மானம் ஆண்டுக்கு 11 சதவிகிதம் உயர்ந்து ரூ. 76 ஆயிரத்து 574 கோடியிலிருந்து ரூ. 84 ஆயிரத்து 889 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் விற்கப்பட்ட பாலிசிகள் ஆண்டுக்கு 2 சதவிகிதம் அதிகரித்து 1.29 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் கடனளிப்பு விகிதம், ஒரு காப்பீட்டாளரின் நீண்ட  கால கடன் பொறுப்புகளை சந்திக்கும்  திறனின் அளவீடு, ஒரு வருடத்திற்கு முன்பு 1.77 ஆக இருந்தது. இது தற்போது 1.85 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, எல்ஐசி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) ரூ. 40.12 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ. 44 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக, 10.54 சதவிகித ஆண்டு சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளது. எல்ஐசி தனது பங்கேற்பு நிதியிலிருந்து ரூ. 5,670 கோடியை பங்குதாரர்களின் நிதிக்கு மாற்றி யுள்ளது.