தளபதிகளின் விசுவாசத்தை தனக்கானதாக மாற்றிய மோடி
2014 இல் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்திய ராணுவம் மிகவும் ஆக்ரோசமிக்க தேசிய உணர்வு கொண்டதாக காட்டப்பட்டு வருகிறது. இதனால் பாஜக பலனடைந்து வந்துள்ளது. மோடியின் ஆட்சியில் ராணுவ உயர் பதவிகளில் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தியதன் மூலம் ராணுவத் தளபதிகளின் தனிப்பட்ட விசுவாசத்தை மோடியின் அரசு எதிர்பார்த்தது; உறுதி செய்தது. தனது சொந்த பிம்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக மோடி ஆயுதம் ஏந்திய படைகளை பயன்படுத்திக் கொண்டார். அவர் ராணுவ உடையில் தோன்றுவதற்கான வாய்ப்புகளை ஒருபோதும் தவறவிடவில்லை. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் பெயரால் நாட்டின் கவனத்தை திசை திருப்பினார். இந்தியாவின் எதிரிகளுக்கு தான் ஒரு சிம்ம சொப்பனம் என்பதாக காட்டிக் கொண்டார்.
பெரும்பான்மையான இந்தியர்கள் ராணுவத்தை பெரிதும் நம்புகின்ற னர். தேசத்தின் மீது அது செல்வாக்கு செலுத்துவதை ஆதரிக்கின்றனர். ராணுவத்தை மதிப்பது என்பது இந்தியத் தன்மையின் அடை யாளம் என்று எண்ணுகின்றனர். வெகுமக்கள் எண்ணத்தை வடிவமைப்பதில் மீடியா, அரசியல் நிறுவனங்கள், பெரும்பாலான கலாச்சார அமைப்புகள், இராணுவம் முக்கிய பங்காற்று கின்றன. ஒழுக்கம், மரியாதை, தியாகம் போன்ற நற்பண்புகள் கொண்டதாக ராணுவம் உருவகப் படுத்தப்படுகிறது. 1999 கார்கில் போரின் போது,நீண்ட காலமாக பொதுச் சமூகத்திலிருந்து விலகி இருக்கும் ராணு வம் என்ற பிம்பம் பெருமளவில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. (அது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம்). அப் போதுதான், போர்க்களக் காட்சிகள் முதன் முத லாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. அந்த ஆட்சி உருவாக்கிய சமூக நோயானது சமீப ஆண்டுகளில் தீவிரமாகி உள்ளது. சினிமாக்களி லும், வெப் தொடர்களிலும் கார்கில் போர் வீரர்கள் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டனர். அன்று பாஜக ஆட்சியில் கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன. அரசியல் தலைவர்களின் முன் னணியில், பொதுமக்கள் கூட்டத்தில் ராணுவம் இறுதிச் சடங்குகளையும், மரியாதையையும் செய்தது. நாடு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் இவையெல்லாம் நடந்தன.ராணுவ தேசியவாதம் ,தேசியக் கொடியுடன் அடையாளப்படுத்தப்பட்டது. இது ராணுவத்தின் தவறுகள், தோல்விகள், பிழைகளை விமர்சனப்பூர்வமாக ஆய்வு செய் வதை தவிர்ப்பதற்கு உதவி செய்தது.
ராணுவத்தை வழிபாட்டு பீடத்தில் நிறுத்திய பாஜக ஆட்சி