புதுதில்லி, மே 30- மத்திய அரசுப் பணியா ளர் தேர்வாணைய முடிவுகள் திங்களன்று வெளியான நிலை யில், இதில் முதல் மூன்று இடங்களையும் மாணவி களே பிடித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ இந்திய அளவில் 42-ஆவது இடம் பிடித்துள் ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடி மைப் பணிகளில் 749 பணி யிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்தியது. முதன்மை எழுத் துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்க ளாக தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வின் இறுதி முடி வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதி காரப்பூர்வ இணையதள மான http://www.upsc.gov.in -ல் திங்களன்று வெளி யிட்டது.அதன்படி 685 பேர் நடப்பாண்டில் தேர்ச்சி பெற் றுள்ளனர்.
இதில், 244 பேர் பொதுப் பிரிவிலும், பொருளாதா ரத்தில் நலிவடைந்த உயர் சாதியினர் 73 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 203 பேர், பட்டி யல் வகுப்பினர் 15 பேரும், பழங்குடி மாணவ - மாணவி யர் 60 பேரும் தேர்ச்சி பெற் றுள்ளனர். தேர்ச்சி பெற்ற வர்களுக்கு பணி ஆணை வழங்கவும் மத்திய பணியா ளர் தேர்வாணையம் பரிந்து ரைத்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வு முடிவு களின்படி நாட்டில் முதல் மாணவியாக உத்தரப்பிர தேச மாநிலத்தை சேர்ந்த சுருதி சர்மா வந்துள்ளார். இவர், செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜேஎன்யு- வின் முன்னாள் மாணவி ஆவார். ஜாமியா மிலியா இஸ்லா மியா ரெசிடென்ஷியல் கோச் சிங் அகாடமியில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த ஆண்டு இந்தியாவின் முதல் மூன்று இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்பவர் இந்திய அளவில் 42-ஆவது இடத்தை யும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிர தமர் நரேந்திர மோடி வாழ்த் துக்களை தெரிவித்துள்ளார்.