பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை நிறுத்துக
ஆந்திர அரசுக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
புதுதில்லி ஆந்திர மாநிலத்தின் எதிர்க் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதி காரப்பூர்வ நாளேடாக இருப்பது “சாக்சி” ஆகும். தெலுங்கு தினசரி நாளிதழ்களில் ஒன்றான இந்த பத்திரிகை, ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கூறி ஆந்திர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. “சாக்சி” செய்தி நிறுவனம் மட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஆசிரியர், துணை ஆசிரியர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தனிப் பட்ட முறையில் மிரட்டல் விடுத் துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில், பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் நோக் கத்தில் செயல்படும் ஆந்திர காவல் துறையின் இந்த அடாவடிக்கு இந்திய பத்திரிகை சங்கம் “இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம்” கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் ஊடகத்தினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக தெலுங்கு தினசரி நாளான “சாக்சி” ஊடகத்திற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக செய்தி கள் வெளிவந்துள்ளன. ஒரு அரசியல் தலைவரின் (தெலுங்கு தேசம்) செய்தியாளர் கூட்டம் தொடர்பாக செய்தியை வெளியிட்ட“சாக்சி” செய்தி நிறுவ னம் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த செய்தித்தா ளின் ஆசிரியர், அனைத்து நாளி தழ்களும் செய்தி வெளியிட்ட பொழுதிலும், “சாக்சி” செய்தி நிறுவனம் மட்டுமே ஆந்திர காவல் துறைக்கு இலக்காகியுள்ளதாக பொது மக்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இதில் மிக மோசமான விஷயம் என்னவென் றால் குற்றச்சட்டத்தின் கீழ் ஆந்திர காவல்துறை “சாக்சி” ஊட கத்தின் ஆசிரியர் மற்றும் ஊழி யர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ள்ளது தான். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் (EGI) நாட்டில் ஊடக சு தந்திரத்தைப் பாதுகாப்பதையும், பத்திரிகை துறையின் தார்மீக தரங்களை உயர்த்துவதையும் தனது குறிக்கோளாகக் கொண்டு ள்ளது. தங்கள் செய்தித் தொகுப் பில், தொழில்முறை விதிமுறைக ளைக் கடைப்பிடிப்பதற்கும், நேர்மை மற்றும் துல்லியத்தின் கோட்பாடுகளைப் பேணுவ தற்கும் இந்திய பத்திரிகை ஆசிரி யர் சங்கம் தொடர்ந்து அனைத்து ஊடகங்களையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ஆந்திரப் பிரதே சத்தில் உள்ள ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றப் புகார்கள் மூலம் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பதை அம்மாநில அரசாங்கம் உறுதி செய்யுமாறு கேட்டுக் ்கொள்கிறோம். அரசியலமைப்பு உத்தரவாதங்களைப் பேணுவ தற்கும், பத்திரிகையாளர்கள் பயமின்றி தங்கள் பொறுப்பு களைச் செயல்படுத்தக்கூடிய சூழலைப் பாதுகாப்பதற்கும் ஆந்திர அரசு அவசர நடவடிக்கை கள் எடுக்கும் என இந்திய பத்திரி கை ஆசிரியர் சங்கம் எதிர்பார்க்கி றது” என அதில்கூறப்பட்டுள்ளது.