states

img

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் மற்றும் புரொமோட்டர்ஸ், முத்திரைத்தாள் விற்பனையகம்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் மற்றும் புரொமோட்டர்ஸ், முத்திரைத்தாள் விற்பனையகம், ஸ்ரீமுத்தையா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை என்.எம். ரெசிடென்சி, என்.எம்.கிளினிக் உள்ளிட்ட ஸ்ரீஅம்மன்பேங்கர்ஸ் குழுமத்தின் நிறுவனர் முத்தையா- விஜயா முத்தையா மகள் டாக்டர் அறிவொளி முத்தையாவிற்கும் நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளி சிறப்புநிலை பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம்-செல்வராணி மகன் டாக்டர் சத்தியசீலனுக்கும் திருமணவிழா பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் திருமணமஹாலில் நடைபெற்றது.  

விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீல்ராஜ், இயக்குநர் மணி, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன், டாக்டர்கள் சோமசுந்தரம் கண்ணுசாமி, ரியல்எஸ்டேட் புரொமோட்டர்கள் சுப்புடு, முன்னாள் எம்எல்ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன், பச்சமுத்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரி அந்தமான் செல்லபெருமாள், டிராவல்ஸ் அதிபர்கள், அரசு அலுவலர்கள், வியாபார பிரமுகர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ,மருத்துவத்துறையினர்,  கல்வியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை  டாக்டர் திலீபன் முத்தையா, டாக்டர் ஷில்பிகாதேவி, ஸ்ரீமுத்தையா மெட்ரிக் பள்ளி தாளாளர் பேராசிரியர் செந்தில்குமார், டாக்டர் ராம்குமார் மற்றும் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.