தமிழகத்தில் உள்ள நூற் பாலைகள் நவம்பர் 7-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து பேட்டி அளித்திருக்கும் ஓபன்- எண்ட் (திறந்தவெளி) நூற்பாலை கள் சங்கத் தலைவர் ஜி.அருள் மொழி, “தமிழகத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஓபன்-எண்ட் நூற்பாலைகள் நாளொன்றுக்கு ரூ.60 கோடி மதிப்புள்ள நூலை உற்பத்தி செய்கின்றன. கடந்த ஆறு மாதங்களாக, 50 சதவீத ஆலைகள் மட்டுமே இயங்குகின் றன. ஆலைகளை நடத்தினால் நஷ்டம் ஏற்படும் என்பதால், உற் பத்தியை நிறுத்த முடிவு செய்துள் ளோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆலைகளுக்கான முக்கிய மூலப் பொருள், ஜவுளி ஆலைகளில் இருந்து வரும் பருத்திக் கழிவுகள் தான். ஒரு கிலோ பருத்தியின் விலை ரூ.160. இதனடிப்படையில கழிவு பஞ்சு விலை கிலோ ரூ.97 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு கிலோ ரூ.115 ஆக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மின்சாரம் மற்றும் மூலப்பொருட் களின் விலை பல மடங்கு அதி கரித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை அரசு குறைக்கா விட்டால், ஜவுளித் தொழிலை மூட வேண்டிய நிலை ஏற்படும். கழிவுப் பருத்தி ஏற்றுமதியை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண் டும் அல்லது நிறுத்த வேண்டும், பருத்தி மீதான இறக்குமதி வரி யை நீக்க வேண்டும். செயற்கை இழைகளுக்கான தரக் கட்டுப் பாட்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும். மாநில அரசு பீக் ஹவர் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி யுள்ளார்.