புதுதில்லி, டிச. 20 - வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் திங்களன்று பனிப்பொழிவு புகை மூட்டத்தால் 2 இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு 5 பேர் பலியாகினர். ஹரியானாவில் துணை முதல்வர் துஷ்யந்த் சவு தாலாவின் காரும், பனி மூட்டம் காரணமாக விபத் தில் சிக்கியது. செவ்வாய்க் கிழமையன்று பஞ்சாப், ஹரி யானா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிர தேசம் ஆகிய 6 மாநிலங் களில் மிக கடுமையான பனிப் பொழிவு காணப்பட்டது. முக்கிய நகரங்கள் நீண்ட நேரத்துக்கு புகை மூட்டத்தால் மூடப்பட்டன. தில்லியில் 20 மீட்டர் தொலை வுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது. வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸாக பதி வாகியுள்ளது.