புதுதில்லி, அக். 2 - பழைய ஓய்வூதியத் திட்டத் தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திரண்ட 20 லட்சத்திற்கும் அதிக மான ஊழியர்களால் தலைநகர் தில்லி குலுங்கியது. ஒன்றிய - மாநில அரசு ஊழி யர்கள் மற்றும் பொதுத்துறை நிறு வனங்களின் ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தக் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால், நரேந்திர மோடி அரசு அந்தக் கோ ரிக்கையை ஏற்பதாக இல்லை. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான போராட்டத்தை நாடு தழுவிய அள வில் ஒருங்கிணைத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற் கான தேசிய இயக்கம் (National Movement for Old Pension Sche me - NMOPS) தில்லியில் மாபெரும் பேரணிக்கு அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை யன்று 20-க்கும் மேற்பட்ட மாநி லங்களில் இருந்து நாடு முழுவது மிருந்து ஓய்வூதியர்கள், ஒன்றிய மாநில அரசு ஊழியர்கள் என சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டு, தில்லி ராம்லீலா மைதானத்தை யே மனிதத் தலைகளால் மூழ்கடித் துள்ளனர்.
ஓய்வூதியக் கோரிக்கைக்கான இந்தப் போராட்டத்திற்கு காங் கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சிகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன. பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். “நாட்டின் ஒவ்வொரு மூலை யிலும் ஓய்வூதிய மறுசீரமைப்புக் கான செய்தியை நாங்கள் பரப்பு கிறோம். எங்களின் முயற்சியாலும், போராட்டத்தாலும் நான்கைந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதி யம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அங்கீகரித்தால், தனிப் பட்ட முறையில் மாநில அரசின் மீது சுமை விழாது என்று எங்கள் குழு நம்புகிறது; எனவேதான், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒன்றிய அரசே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று போரா டுகிறோம்” என்று பேரணியில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற் கான தேசிய இயக்கத்தின் தலை வர் விஜய் குமார் பந்து பேசியுள்ளார்.
மறைத்த ஊடகங்கள்
கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் ஞாயி றன்று ஓய்வூதியர்கள் நடத்திய பேரணியும் ஒன்றாக பார்க்கப்படு கிறது. ‘ஓய்வூதிய சங்கநாதப் பேரணி’ என்ற பெயரில், நாடு முழு வதும் 20-க்கும் மேற்பட்ட மாநி லங்களிலிருந்து, ராம்லீலா மைதா னத்தில் குவிந்த- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் எழுப்பிய முழக்கம், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடி அரசை பெரும் அதிர்ச்சிக்கு உள் ளாக்குவதாகவும் - ஆட்சி மாற்றத்திற்கான எச்சரிக்கையாக வும் அமைந்துள்ளது. இதன்காரணமாகவே, 20 லட்சம் பேர் திரண்ட இந்த பிரம் மாண்ட நிகழ்வை ஒரு சில ஆங்கில ஊடகங்கள்- அதாவது பிடிஐ, நேஷனல் ஹெரால்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங் களைத் தவிர, ஆசியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனம் என கூறிக்கொள்ளும் ஏஎன்ஐ (ANI) உட்பட மோடி அரசுக்கு ஆதர வான தேசிய ஊடகங்கள் எதுவும் சிறு செய்தியாக கூட வெளியிட வில்லை. இதில், மோடி அரசின் பயமே வெளிப்படுவதாக ஓய்வூதி யர்கள் தெரிவித்துள்ளனர்.