“நான் உத்தரப் பிரதேச போலீ சாருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நினை வில் வைத்துக்கொள் ளுங்கள். யோகி ஆதித்யநாத் நிரந்தரமாக முதல்வ ராக இருக்கமாட்டார். மோடி நிரந்தர மாக பிரதமராக இருக்கமாட்டார். இஸ்லா மியர்களாகிய நாங்கள் காலத்தால் அமைதியாக இருக்கிறோம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த அநீதியை நாங்கள் மறக்கமாட்டோம். உங்களின் அநீதியை நாங்கள் நினை வில் வைத்துள்ளோம்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி பேசியுள்ளார்.