states

நீதிபதி எஸ். முரளிதர் மீதான அவதூறுக்காக மன்னிப்பு கேட்டார் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி!

புதுதில்லி, ஜூலை 14 - நீதிபதி எஸ். முரளிதர் குறித்த  அவதூறு கருத்துக்களை வெளி யிட்டதற்காக, ஆடிட்டர் எஸ். குரு மூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால், அவர் மீதான வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ்-ஸின் வால் அமைப்பு க்களில் ஒன்றான சுதேசி ஜாக்ரன்  மஞ்சின் இணை ஒருங்கிணைப்பாள ராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருப்பவர் எஸ். குருமூர்த்தி. ஆடிட்ட ரான இவர், சோ. ராமசாமியின் மறை வுக்குப் பிறகு, ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கே உரிய வகையில், நாட்டின் முக்கிய ஆளுமைகளைப் பற்றி அவதூறு பரப்புவதையும், வாய்க்கொழுப்பான வார்த்தைகளை பிரயோகித்து சேற்றை வாரியிறைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் ஆவார்.  அந்த வகையில்தான், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியுமான நீதிபதி எஸ். முரளிதருக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பி, கடந்த 2018-ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்கில் சிக்கினார். பீமா - கோரேகான் வழக்கில், சமூக  செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா மீதான தடுப்புக் காவலை ரத்து செய்து நீதிபதி எஸ். முரளிதர் தீர்ப்பு வழங்கியிருந்தார்.  இதையொட்டி, 2018-ஆம் ஆண்டு, “தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளி தருக்கும், கவுதம் நவ்லகாவுக்கும் உள்ள தொடர்பு ஏன் வெளியிடப்பட வில்லை?” என்ற தலைப்பில் த்ரிஷ்டி கோன் என்ற வலைப்பதிவில் கட்டுரை  ஒன்று வெளியிடப்பட்டது. இதனை தேஷ் கபூர் எழுதியிருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்ற  நிலையில், தேஷ் கபூரே நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்டு, கட்டுரையை நீக்கி விட்டார்.

ஆனால், தேஷ் கபூரின் அந்த கட்டுரையை ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்படியே மறுபதிப்பு செய்து, நீதிபதி எஸ். முரளி தர், ‘சார்புடையவர்’ என்று அவதூறு பரப்பினார்.  அதே ஆண்டில், ஐஎன்எக்ஸ் மீடியா  பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ்  தலைவர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி  சிதம்பரத்திற்கு நீதிபதி எஸ். முரளிதர் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தர விட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக வும் ஆடிட்டர் குருமூர்த்தி அவதூறு வேலையில் இறங்கினார்.  நீதிபதி எஸ். முரளிதர், ப. சிதம்பரத்தின் ஜூனியர். அதனால்தான், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியிருக்கிறார்; அமலாக்கத்துறை கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது  என்று உத்தரவிட்டுள்ளார் என்று பழிசுமத்தினார்.

இதற்காக, ஆடிட்டர் குருமூர்த்தி மீது தில்லி உயர் நீதிமன்ற பார் அசோ சியேஷன் (DHCBA) 2018-ம் ஆண்டே குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதன்மீது கடந்த  5 ஆண்டுகளாக விசாரணை நடை பெற்று வந்தது.  குருமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறி ஞர் மகேஷ் ஜெத்மலானி, ரவி  சர்மா, மோகித் முத்கல் ஆகியோர் ஆஜ ராகி வாதாடினர். பார் அசோசியேஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் டிகு ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தார்.  விசாரணையின்போது, தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நீதிபதி முரளிதர், ப. சிதம்பரத்திற்கும் தனக்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும்,  அவரிடம் தான் ஜூனியராக பணிபுரிந்த தில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.  ஆனால், தனது தரப்பு அவதூறை  நியாயப்படுத்த முடியாத ஆடிட்டர் குருமூர்த்தி நீதிமன்றத்தில் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோருவதாகவும், அவ தூறு பரப்பும் அனைத்து டுவீட்களை யும் நீக்கிவிட்டதாகவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அப்போது மன்னிப்பையும் டுவீட்டாக வெளியிட நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. இதனிடையே, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குருமூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்றுக்கொண்டு, கிரிமினல் அவ மதிப்பு வழக்கில் இருந்து குரு மூர்த்தியை விடுதலை செய்து, வழக்கை முடித்து வைப்பதாக தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.