states

img

சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்-க்கு சன்சத் ரத்னா விருது

புதுதில்லி, பிப்.22- சிறந்த நாடாளுமன்ற உறுப்பின ருக்கான சன்சத் ரத்னா விருது பெற்ற  டாக்டர். ஜான் பிரிட்டாஸ் எம்பி உள்ளிட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரி வித்துள்ளார். “சன்சத் ரத்னா விருது பெற்ற நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் சகாக்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் தொடர்ந்து தங்கள் செழுமை யான நுண்ணறிவால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை செழுமைப்படுத் தட்டும்” என்று பிரதமர் ட்வீட் செய்துள் ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரி வித்தார். விருது பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் டாக்டர். ஜான் பிரிட்டாஸைத் தவிர, டாக்டர். மனோஜ் குமார் ஜா, ஃபௌசியா தஹ்சீன் அகமது கான் ஆகியோர்  உள்ளனர். மக்களவை உறுப்பினர் கள் பித்யுத் பரன் மஹதோ, டாக்டர். சுகந்தா மஜும்தார், குல்தீப் ராய் சர்மா, டாக்டர். ஹீனா விஜயகுமார் கவிதா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கோபால் சீனாய்யா ஷெட்டி, சுதிர் குப்தா, டாக்டர். அமோல் ராம் சிங் கோஹ்லி ஆகியோர் சன்சத் ரத்னா விருது பெற்றவர்கள். வாழ்நாள் சாதனையாளர்  டி.கே.ரங்கராஜன் டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம்  வாழ்நாள் சாதனையாளர் விருது  தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்க ராஜனுக்கு வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.