புதுதில்லி, நவ. 25 - ஒன்றிய மோடி அரசின் கட்டுப் பாட்டில் உள்ள சிவில் விமான போக்குவரத்துத் துறையின் ஏரோ ஸ்போர்ட்ஸ் இயக்கு நரகத்தில் தலைமை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் கேப்டன் அனில் கில். இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் நாட்டில் உள்ள அனைத்து விமானப் பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் “ரெட் பேர்ட்” என்ற பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு பயிற்சி விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளாகின. இந்த விவகாரம் குறித்து கேப்டன் அனில் கில் மேல் சந்தேகம் வலுக்கவே விமா னத்துறை இயக்குநரகம் விசாரணையில் இறங்கியது. இந்த விசாரணை முடிவில், அனில் கில் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் அளவு பணத்தை லஞ்சமாக பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முக்கியமாக, பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து விமானங்களையே அனில் கில் லஞ்சமாகப் பெற்று பிரம்மாண்ட முறைகேட்டை அரங்கேற்றியது அம்பல மாகியுள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட விமானங்களை, சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்டு, ஆண்டுக்கு ரூ. 90 லட்சம் அளவுக்கு வாடகை மோசடியிலும் அனில் கில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஊழல் வெளிப்பட்ட நிலையில், கேப்டன் அனில் கில் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கலக்கத்தில் ஜோதிராதித்ய சிந்தியா அனில் கில் மீதான முறைகேடுகளை தீவிரமாக விசாரித்தால் இந்திய விமான போக்குவரத்துத்துறையின் மிகப்பெரிய ஊழலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தால் ஒன்றிய பாஜக அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்ச ரான ஜோதிராதித்ய சிந்தியா-வும் கலக்கம் அடைந்திருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.