states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி மூத்த தலைவர் ராஜேஷ் யாதவ்

பிரதமர் மோடி பீகாருக்கு வரும் போதெல்லாம், அவர் பரிசுகள் வழங்கப் போகிறார் என்று பாஜக பெருமை யாக சொல்கிறது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் வெற்றுரையுடன் பீகார் மக்களை ஏமாற்றி வருகிறார். 2015 தேர்தலுக்கு முன்பு அராவில் ஆயிரக்கணக்கான கோடிகள் அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். ஆனால் அறிவிப்பே அடையாளமின்றி காணாமல் போயுள்ளது.

சமாஜ்வாதி எம்.பி., இக்ரா சௌத்ரி

நாடாளுமன்ற அவையை நடத்துவது அரசின் பொறுப்பாகும். ஆனால் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது 30 நாட்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற எந்த முதலமைச்சரையும் நீக்க ஒரு சட்டத்தை அரசு கொண்டு வர உள்ளது. இது சர்வாதிகாரம்.

தமிழ் திரைப்பட இயக்குனர் முருகதாஸ்

மற்ற மொழிகளில் பொழுது போக்கிற்காக படம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழி இயக்குநர்கள் படத்தின் மூலம் கல்வியையும், சமூக கருத்துக்களை சொல்லும் வகையில் படத்தை எடுக்கிறார்கள். இதனால் தான் தமிழ் மொழி படங்கள் ரூ.1000 கோடி வசூலிக்காதது காரணம்.

திமுக எம்.பி., திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு தயாராக இல்லாத ஒன்றிய அரசு, அவைக்கு வராத பிரதமர், கேள்விக்கு பதில் சொல்லாத உள்துறை அமைச்சர் என்ற சூழல் உள்ளது. ஆனால் எதிர்க் கட்சிகளின் மீது கடுமையான அடக்குமுறையை அவிழ்த்துவிடவே புதிய பதவி நீக்க மசோதா ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.