states

img

அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ‘உண்மையான மனிதி வீணா ஜார்ஜ்’

திருவனந்தபுரம், அக்.24- புற்றுநோயில் இருந்து மீள வாய்ப்பில்லை என்கிற நிலையில் விரக்தியின் எல்லையில் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என அந்த தம்பதி முடிவு செய்து அதை முகநூலில் பதிவிட்ட சூழலில் உடனடியாக அவர் களை தொடர்புகொண்டு ஆற்றுப் படுத்தி சிகிச்சை பெறச் செய்து காப்பா ற்றியுள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.  இதுகுறித்து தீபா தச்சேடத்து என்பவர் தனது முகநூல் பதிவில் நன்றிப் பெருக்குடன் இப்படி எழுதுகிறார் : ‘நான் இதைச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அவர்களால்தான் நானும் என் கணவரும் இன்று உயிருடன் இருக்கிறோம். எல்லாமுமாக இருந்த என் கணவருக்கு புற்றுநோய், அது நான்காவது கட்டம் என்று தெரிந்ததும், வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தேன். நான்காவது கட்டத்தை எட்டிய நிலையில் மருத்துவக் கல்லூரி ஊழி யர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு முகநூலில் பதிவிட்டு, இந்த உலகத்திடம் இருந்து விடைபெறலாம் என்று எண்ணினோம். அந்த பதிவை இட்ட சில நிமிடங்களில் வீணா ஜார்ஜ் போன் செய்து அக்கறையுடன் விசாரித்தார். ஒரு அமைச்சரைப் போல அவர் என்னிடம் பேசவில்லை. சொந்த சகோதரி போல் பேசினார். நல்ல ஆலோசனைகளை வழங்கினார். நீங்கள் தனியாக இல்லை, நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன் என்று  கூறினார்.  என்ன தேவை என்றாலும் என்னை கூப்பிடலாம் என்று கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர் அப்படிச் சொன்னாலும் நம்பிக்கையே இல்லை.  ஆனால், அடுத்த பத்து நிமிடத்தில் ஆர்சிசியில் (மண்டல புற்றுநோய் மையம்  - திருவனந்தபுரம்) இருந்து தொடர்புகொண்டு, வீணா மேம் எங்களு க்கு போன் செய்து உங்களுக்கு தேவை யான அனைத்து உதவிகளையும் செய்ய  சொன்னதாக கூறினர். இரண்டு மூன்று மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இதுபோன்ற அழைப்பு வந்தது. வீணா மேம் போன் செய்ய சொன்னார், நீங்கள் இங்கு வர விரும்புகிறீர்களா, எல்லா உதவிகளையும் செய்கிறோம் என்று தெரிவித்தனர். மருத்துவக் கல்லூரியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் ‘எனக்கு ஆர்வம் இல்லை’ என்றேன். வீணா மேம் மீண்டும் அழைத்தார். ‘எங்கு சிகிச்சை பெற விரும்புகிறீர்கள்’ என்று கேட்டார். ‘சேட்டனுக்கு (சகோதரன்) நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும்’ என வும், ‘எம்விஆரில் சிகிச்சையை தொடர லாம்’ என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கான பணம் எங்களிடம் இல்லை என தெரிவித்தேன். ‘தேவையானவற்றை செய்யலாம்’ என்று மேம் சொல்லிவிட்டு சிகிச்சையை ஆரம்பிக்கச் செய்தார்.

தற்போது எம்விஆர் மருத்துவமனையில் என் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கு முன்பு சென்றபோது இருந்ததை விட 80 சதவிகிதத்துக்கு மேல் மாற்றம் உள்ளது. அடுத்த ரெண்டு கீமோவுக்கு பிறகு நோய் முழுவதும் குணமாகும்னு டாக்டர் கூறியுள்ளார். இதற்கெல்லாம் வீணா மேமுக்கு நன்றி. அன்றே நாங்கள் தற்கொலை செய்துகொண்டிருந்தால்?. இன்று எங்களின் வெற்றிக்கு வீணா மேமின் ஆதரவே காரணம். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் போன் செய்து விசாரிப்பார். அவர் ஒரு அமைச்சரைப் போல் பேசு வதில்லை. இன்றுவரை நீங்கள் எந்தக் கட்சி என்று கேட்டதில்லை. அடிக்கடி எனக்கு காசு தேவைப்பட்டு பலரிடமும் கையை நீட்டும்போது, ‘நீங்கள் எந்த கட்சி?’ என்று கேட்டார்கள். வீணா மேமுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நான்  ஒன்று சொல்கிறேன், அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அமைச்சர் என்பதை விட உண்மையான மனிதி. இந்த முழுமையான புன்னகை என்றென்றும் நிலைத்திரு