states

மகாராஷ்டிராவில்  ஜோதிடர் மூலம் மத வன்முறை திட்டம் அம்பலம்

மகாராஷ்டிராவில்  ஜோதிடர் மூலம் மத வன்முறை திட்டம் அம்பலம்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 27ஆம்  தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மகா ராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி  விழா பிரசித்தி பெற்றது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு குறுந்  தகவல் ஒன்று வந்தது. அதில், மும்பைக்  குள் 14 பயங்கரவாதிகள் 400 கிலோ  ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் ஊடுருவி யுள்ளதாகவும், அந்த வெடி மருந்துகள்  34 வாகனங்களில் வைக்கப்பட்டுள்ளதாக வும், அது வெடிக்க தயாராக உள்ளதாக வும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மகா ராஷ்டிரா முழுவதும் பாதுகாப்பு பலப்  படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக,  ஆர்எஸ்எஸ், இந்துத்துவா குண்டர்கள் ஆர்டிஎக்ஸ் குண்டுகளுடன் மகாராஷ்டிரா வில் முஸ்லிம்கள் ஊடுருவியுள்ளனர் என வெறுப்புப் பேச்சை கிளப்பிவிட்ட னர். இதனிடையே மும்பையில் பயங்கர வாத தாக்குதல் நடைபெறும் என்று மிரட்டல் விடுத்த அஸ்வினி குமார் (51) என்ற ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டார் 79 பகுதியில் வசித்து  வருகிறார். அஸ்வினி குமார் தனது நண்  பரை காவல்துறையில் சிக்க வைக்க  பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத் துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் மகாராஷ்டிராவில் ஜோதி டர் மூலம் மத வன்முறையை கிளப்ப  இந்துத்துவா குண்டர்கள் திட்டமிட்டதாக வும், இந்த திட்டம் அம்பலமாகியுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.