states

img

நேர்மையாக நடக்குமா அங்கீகாரத் தேர்தல்?

வாஷிங்டன், ஜன.22- மெக்சிகோவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் நடைபெற விருக்கும் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவுடன் மெக்சிகோ போட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறுகிறது. மெக்சிகோவின் சிலாவ் நகரில் அமைந்துள்ள ஜென ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலை யில் பணியாற்றும் 7 ஆயிரம் தொழி லாளர்கள் இதில் வாக்களிப்பார்கள். நான்கு தொழிற்சங்கங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளன. எந்தத் தொழிற்சங்கத்திற்கு அதிக மான வாக்குகள் கிடைக்கிறதோ, அந்தத் தொழிற்சங்கம்தான் நிர்வா கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்.

கடந்த ஆண்டு நடந்த வாக்கெ டுப்பில் ஏராளமான முறைகேடுகள் காணப்பட்டன. சிதைக்கப்பட்ட வாக் குச்சீட்டுகள் கண்டெடுக்கப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அப் போது தேர்வு செய்யப்பட்ட தொழிற் சங்கம் மீது குற்றச்சாட்டு வைக்கப் பட்டது. நிர்வாகத்தோடு அவர்கள் பேசி போடப்பட்ட ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒப்பந்தம் நிராகரிக் கப்பட்டது. இதனால், புதிய தொழிற் சங்கத் தேர்தலுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் மெக்சிகோ ஆலையில் உள்ள தொழி லாளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

பெரிய தொழிற் சங்கங்களின் ஒன்றான யு.ஏ.டபிள்யூ யின் தலைவர்களில் ஒருவரான ரே கர்ரி, “தேர்தல் கண்காணிப்பா ளர்கள் உடனடியாக சிலாவுக்கு அனுப்பப்பட வேண்டும். மிரட்டலோ அல்லது நிர்ப்பந்தமோ இல்லாமல் சுதந்திரமாகத் தொழிலாளர்கள் வாக் களிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள் ளார். துவக்கத்தில் பெர்னி சாண்டர்ஸ் பக்கம் உறுதியாக நின்ற யு.ஏ. டபிள்யூ, அவர் போட்டியிலிருந்து விலகிய பிறகு, ஜோ பைடனுக்கு ஆதரவாக நின்றது. தொழிலா ளர்களின் வாக்குகளை பைடன் பக் கம் விழ வைப்பதில் தொழிற்சங்கங் கள் பெரும் பங்களித்தன. இந்நிலை யில், தாங்கள் செய்த பணியை அங்கீ கரிக்கும் வகையில், தொழிற்சங்கத் தேர்தல்களை நியாயமாக நடத்தச் செய்வதில் பெரு நிறுவனங்களை பைடன் வலியுறுத்த வேண்டும் என்று சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

;