states

img

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடும் சாடல் மம்தா ஒரு சந்தர்ப்பவாதி; அவர் பாஜகவுக்கு வேலை செய்கிறார்!

புதுதில்லி, டிச. 3 - திரிணாமுல் காங்கிரஸ் தலைவ ரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தேசிய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். பாஜக-வை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். “தில்லி வந்தால், காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தியை சந்திக்க வேண்டும் என்று சட்டம் இல்லை” என்று கூறிய அவர், அதேநேரம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிராவிற்கு சென்று பாஜக-வுக்கு எதிரான கூட்டணியில் இருக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் என்றால், மறுநாளே பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும், நாட் டின் முதற்பெரும் பணக்காரருமான அதானியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது அரசியல் வட்டாரத்தில் குழப்ப ங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், “மம்தா ஒரு சந்தர்ப்பவாதி” என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

 “மம்தா பானர்ஜி ஒவ்வொரு நேர த்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். பாஜக-வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 20 அன்று கூறி னார். தற்போது கோவா, உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களில் காங்கிரசுக்கு எதிராக போட்டி யிடுகிறார். இது மம்தா பானர்ஜிக்கு அரசியல் சமயோசிதமாக தெரிய லாம். ஆனால், காங்கிரசுடன் மோது வதன் மூலம், தான் எதிர்ப்பதாக நடிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச சக்திகளுக்கே மம்தா துணைபோகிறார். அவா் முழுமை யான அரசியல் சந்தா்ப்பவாதியாக மாறி விட்டார். மம்தா பானா்ஜி வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வடிவில் பேசக் கூடியவா். ஏற்கெனவே அவா் பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் மாறி மாறிப் பய ணித்துள்ளார். தனது அரசியல் ஆதாயத்துக்காக சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எப்போதும் அவா் செயல்படு வார்” என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சாடியுள்ளார்.

;