states

img

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை – விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்  

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.  

டெல்லி – மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் மழை, வெயிலை பொருட்படுத்தாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வந்தனர். கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.  அதனை தொடர்ந்து விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.  

இந்த நிலையில் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், தற்காலிகமாகவே விவசாயிகள் வீடு திரும்புவதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. போராட்ட காலத்தில் எங்களுக்காக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்த கிராம மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  3 விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்ற பிறகு ஒன்றிய அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எங்களது இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது திரும்பப் பெறப்படவில்லை என இவ்வாறு கூறினார். 

;