states

img

விவசாயத் தியாகிகளின் பட்டியலை மக்களவையில் வெளியிட்டார் ராகுல்

புதுதில்லி வேளாண் சட்டத்திற்கு எதி ரான போராட்டத்தின் போது உயிரி ழந்த விவசாயிகள் குறித்த தரவு கள் இல்லை என்று ஒன்றிய பாஜக அரசு கூறிய நிலையில், உயிரிழந்த விவசாயிகள் பட்டியலை மக்க ளவையில் காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி தாக்கல்செய்துள்ளார். போராட்டத்தில் உயிரிழந்த விவ சாயிகளுக்கு தரப்பட்ட இழப்பீடு குறித்து நவம்பர் 30 அன்று மக்கள வையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பி யது. இதற்கு பதிலளித்த ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளை அரசு கண்காணிக்கவில்லை; எனவே அதற்கான தரவுகள் இல்லாததால் இழப்பீடு குறித்த கேள்வியே எழவில்லை என்று கூறி னார். 

இந்நிலையில் மக்களவையில் செவ்வாயன்று கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநி லங்களில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி களின் பட்டியலை தாக்கல் செய்தார். வேளாண் சட்ட ரத்து அறிவிப்பின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தவறு இழைத்து விட்டதாக கோரி மன்னிப்புகோரிய பிறகும் உயிரிழப்புகள் இல்லை; தரவுகள் இல்லை என ஒன்றிய அரசு கூறுவது தவறு என்றும் ராகுல் குறிப்பிட்டார். காங்கிரஸ் சேகரித்துள்ள போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி களின் பட்டியலின் அடிப்படை யில் பஞ்சாப் அரசு இழப்பீடு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி யுள்ள ராகுல், ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ராகுல் காந்தி யின் தீர்மானத்திற்கு ஒன்றிய அர சின் சார்பில் யாரும் பதிலளிக்க வில்லை. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து காங்கிரஸ், திமுக, சிவ சேனா கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவை ஒத்திவைப்பு

இதனிடையே மாநிலங்களவை யில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து முழக்கங் களை எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே ‘வாடகைத் தாய் மசோதாவை’ விவாதத்துக்கு எடுக்க அவை துணைத்தலைவர் முயற்சி செய்தார். இதனால் அவையின் மையப்  பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கூடி அவை துணைத் தலை வருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட னர். இதனை தொடர்ந்து மாநிலங் களவை மீண்டும் ஒத்திவைக்கப் பட்டது.

மன்னிப்பு கேட்குமாறு மிரட்டல்

இந்நிலையில் தில்லியில் நடந்த  பாஜக எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், 12 எம்பிக்களும் மன்னிப்பு கேட்டால் அவர்கள் மீதான இடை நீக்கம் உத்தரவை திரும்ப பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம் என்று அடாவடியாகக் கூறினார்.
 

;