states

img

அரசியலுக்கு அப்பாற்பட்டது கலை: போலந்து இயக்குநர் கிறிஸ்டோப் சனுசி

அரசியலுக்கு அப்பாற்பட்டது கலை என்பதை கேரள அரசு நிரூபித்து வருகிறது என்று பிரபல போலந்து இயக்குநர் கிறிஸ்டோப் சனுசி கூறினார். தனது மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்காக 28ஆவது ஐஎப்எப்கே விரிவான பங்களிப்பு விருதை தனக்கு வழங்க கேரள அரசு முடிவு செய்திருப்பது புரட்சிகரமானது என்றும் அவர் கூறினார். சர்வதேச திரைப்பட விழாவில் ஒட்டுமொத்த பங்களிப்பு விருதை இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து பெற்றுக் கொண்டு அவர் மேலும் பேசுகையில், மாநில அரசின் முடிவுகளும் தேர்வுகளும் கலையின் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துக்காட்டுகின்றன. நான் எழுதிய “நாங்கள் ஒருபோதும் உருவாக்குவதில்லை” என்ற புத்தகத்தில் இருந்து எந்த ஒரு பகுதியையும், யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் வேறு எந்த உரிமை கோரலும் அதில் இருக்காது என்று, அவர் அறிவித்தார்.