states

img

பாஜக ஆளும் ம.பி. மாநிலத்தில் மசூதியைச் சேதப்படுத்தி காவிச்சாயம்!

போபால், மார்ச் 14 - மத்தியப் பிரதேசம் மாநிலம் நர்மதா புரம் பகுதியில் இருந்து 40 கி.மீ. தொலை வில் 50 ஆண்டுகள் பழமையான மசூதி  ஒன்று உள்ளது.  இங்கு ஞாயிற்றுக்கிழமையன்று அதி காலை, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மசூதியைச் சேதப்படுத்தியது மட்டுமின்றி பல இடங்களில் காவி வண்ணம் பூசி விட்டு  சென்ற சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணியளவில் அவ்வழியாக வந்த இளைஞர்கள் சிலர் மசூதிக்கு காவி  நிறம் பூசப்பட்டிருப்பதையும், கதவு உடைக் கப்பட்டு இருப்பதையும் கண்டு. மசூதி பாதுகாவலர் அப்துல் சத்தாருக்கு தகவல்  அளித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது, மசூதியின்  மரக்கதவு உடைக்கப்பட்டு, அருகிலி ருந்த மரு ஆற்றில் வீசப்பட்டிருந்தும், கோபுரம் மட்டுமின்றி கல்லறை, நுழைவு  வாசலிலும் காவி வண்ணம் பூசப்பட்டிருந் ததும் தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில் காவல் துறை மெத்தனமாக செயல்பட்டதாகவும், கிராம வாசிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறிய லில் ஈடுபட்ட பிறகே, காவல் துறை முழு  வீச்சில் களமிறங்கியதாகவும் கூறப்படு கிறது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  காவல் துறையினர், மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். “சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். முதலில் மசூதியை மீட்டெடுப்பதே முன்னுரிமை பணி. அது  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து,  குற்றவாளிகளை கைது செய்வோம். இப்பகுதியில் இரு சமூகத்தினரும் அமைதியாக வாழ்வதாலும், கடந்த காலங்களில் எவ்வித மத பிரச்சனையும் இல்லாததாலும், இச்செயலில் உள்ளூர்  இளைஞர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை”  என்று மக்கன் நகர் காவல் நிலைய ஆய்வா ளர் ஹேமந்த் ஸ்ரீவஸ்தவ் தெரிவித்துள் ளார்.