ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை ஒப்போ இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்தபோது முறையாக சுங்கவரியை செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்நிறுவனத்திலும் அங்கு பணியாற்றும் முக்கிய பொறுப்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையாக செலுத்த வேண்டிய வரியைக் குறைத்துக் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடியை வரி ஏய்ப்பு செய்தது உறுதியாகியுள்ளது என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.