தான் ஆட்சிக்கு வந் தது முதலே, புதிய இந் தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி கூறி வரு கிறார். 2016 பணமதிப்பு நீக்கத்தின் போதும் இவ்வாறு கூறினார். இந்நிலையில், 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது அதாவது 2047-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும், புதிய இந்தியா பிறப்பதை யாரும் தடுக்க முடியாது என்றும் தில்லியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்தநாள் விழாவில் மீண்டும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.