states

img

அமலாக்கத்துறை பழிவாங்கல் பற்றி மோடியிடமே நேரில் கேட்டு விட்டேன்!

புதுதில்லி, ஏப்.7- நில மோசடி வழக்கில் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத், அவரது மனைவி மற்றும் அவ ரது உறவினர்களின் ரூ.1,034 கோடி சொத்துக்களை அம லாக்க இயக்குநரகம் முடக்கி யுள்ளது.  இதேபோல மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வின் உறவினர்கள், அமைச்சர் களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகிய தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இது ஒன்றிய  பாஜக அரசின் பழிவாங்கல் நட வடிக்கையே என்று குற்றச் சாட்டு உள்ளது. இதனிடையே, புதனன்று பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ‘ஒன்றிய அரசுக்கு எதிராக பேசியதால் தான் சிவசேனா தலைவர் சஞ் சய் ராவத்திற்கு எதிராக அம லாக்கப் பிரிவு இயக்குநரகம் நடவடிக்கை எடுத்ததா?’ என் பதை பிரதமரிடமே நேரடியாக கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.  “ஒரு பத்திரிகையாளர் மற் றும் மூத்த நாடாளுமன்ற உறுப் பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எனவே, இந்த விஷ யத்தை பிரதமரின் கவனத் துக்கு எடுத்துச் சென்றேன்” என்றும், “மத்திய விசாரணை அமைப்புகள் இதுபோன்ற நட வடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தால், ஒன் றிய அரசுதான் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” சரத் பவார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.