states

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு  

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு  

243 தொகுதிகளைக் கொண்ட  பீகாரில் அடுத்த மாதம் 2 கட்  டங்களாக சட்டமன்ற தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான  தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகு திப் பங்கீட்டில் இழுபறி நிலவி வந்தது. இந்த இழுபறி ஞாயிறன்று முடிவுக்கு வந்தது.  அதன்படி கூட்டணியின் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய  ஜனதாதளம் என இரு கட்சிகளுமே தலா 101 என மொத்தம் 202 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 41 தொகு திகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 தொகு திகளில் போட்டியிடுகின்றன. ராஷ்ட்ரிய  லோக் மோர்ச்சா (உபேந்திர குஷ்வாகா)  மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா  (மஞ்சி) ஆகிய இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.