states

அன்றாட வாழ்க்கைக்கு அதிகம் செலவிட வேண்டிய நகரங்களில் மும்பைக்கே முதலிடம்

புதுதில்லி, ஜூன் 8 - இந்தியாவில் அன்றாட வாழ்க்கை க்கு அதிகம் செலவிட வேண்டிய நகரமாக மும்பையே உள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு, உலக அள வில் அதிகம் செலவாகும் நகரங்களின் (Cost of Living City Ranking 2023) பட்டி யலை அமெரிக்காவை சேர்ந்த ‘மெர்சர்’  நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக, 5 கண்டங்களைச் சேர்ந்த 227 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதன்படி, உலக அளவில் வாழ்க்கைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நகரங்களில் சீனாவின் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் பொருளாதார தலைநகரமான மும்பை 147-ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தலைநகர் தில்லி 169-வது இடத்திலும், சென்னை 184- ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு 189-ஆவது இடத்தி லும், ஹைதராபாத் 202-ஆவது இடத்தி லும், கொல்கத்தா 211-வது இடத்திலும் உள்ளன.  மேலும், இடம், வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செல விடப்படும் நகரங்களில், ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச் நகரங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள் ளன. இந்தியாவை பொறுத்தவரை, இதிலும் மும்பையே முதலிடத்தில் உள்ளது. சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்கள்  அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.  இந்தியாவின் ஏனைய நகரங்களில் செலவாகும் தொகையை விட 50 சதவிகிதம் மும்பையில் அதிகமாக செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.