states

ம.பி. பாஜக ஆட்சியில் ரூ. 2.70 லட்சம் கோடி ஊழல்: 18 ஆண்டு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

போபால், ஆக. 20 - மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான பட்டியலையும் வெளி யிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறி விக்கும் முன்னரே பாஜக 39 பேர் களைக் கொண்ட தனது முதல் வேட்பா ளர் பட்டியல் வெளியிட்டுவிட்டு, தேர் தல் வேலைகளைத் துவக்கியுள்ளது. இந்நிலையில்தான், கடந்த 18 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி  அளவிற்கு பாஜக ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டிய லிட்டுள்ளது.

இதுதொடர்பாக மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. கூகுளில் ‘ஸ்கேம்’ என்று தேடினால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் படம் தான் வரும் அளவுக்கு ஊழல் மலிந்துள் ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவ ராஜ் சிங் சவுகான் அரசு, அதன் 18 ஆண்டு கால ஆட்சியில் மோசடிகளில் உலக சாதனை படைத்துள்ளது. பட்டியல் மிக நீளமானது. ஆனால் காங்கிரஸ் கட்சி சில மெகா ஊழல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது. 50 சதவிகித கமிஷன் ராஜ்ஜியம் மாநிலத்தை ‘ஊழல் மாநிலமாக’ மாற்றியுள்ளது. 2018 மற்றும் 2020-க்கு இடையில் எனது ஆட்சிதான் நடந்தது. அப்போது, ஊழல் முறைகேடுகளை விசாரிப்பதை விட, மத்திய பிரதேசத்தை முத லீட்டாளர்களின் மையமாக மாற்று வதில் கவனம் செலுத்தினேன். 2019 மக்க ளவை தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளின் காரணமாகவும் இரண்டரை மாதங்கள் வீணாகிவிட்டது.  ஆனால் ம.பி. பாஜக ஆட்சியில் பிரபல வியாபம் ஊழல் (ரூ. 2,000 கோடி), சட்டவிரோத சுரங்கம் (ரூ. 50 ஆயிரம் கோடி), இ-டெண்டர் ஊழல் (ரூ. 3 ஆயிரம் கோடி), ஆர்.டி.ஓ.  ஊழல் (ரூ. 25 ஆயிரம் கோடி), மது பான ஊழல் (ரூ. 86 ஆயிரம் கோடி),  மகாகல் லோக் ஊழல் (ரூ. 100 கோடி),  மின்சார ஊழல் (ரூ. 94 ஆயிரம் கோடி) உள்பட 254 ஊழல்கள் மூலம் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது. இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார்.