புதுதில்லி, ஜூலை 31 - 2 நாள் விடுமுறைக்குப் பின், நாடாளுமன்றம் திங்க ளன்று மீண்டும் கூடியது. மாநி லங்களவையில் அவை நட வடிக்கைத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் விதி எண் 267-இன் கீழ், விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே வலியுறுத்தி னார். ஆனால், விதி எண்: 176-இன் கீழ், வழக்கம்போல குறுகியகால விவாதத்தை மட்டுமே அனுமதிப்போம் என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூற அவையில் அமளி ஏற்பட்டது. இதை யடுத்து, பகல் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல காலை 11 மணிக்கு கூடிய மக்களவை யும், சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் இரு அவைகளும் கூடினா லும் மீண்டும் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக் கப்பட்டன. இதனால் 8-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்த அமளிக்கு இடையே, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர், ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து, வழக்கம் போல தங்களுக்குள்ள எண்ணிக்கை மூலம் நிறை வேற்றிக் கொண்டார். தில்லி சேவைகள் மசோதாவை அமித்ஷா திங்களன்று தாக் கல் செய்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அது அலுவல்களில் பட்டிய லிடப்படவில்லை.