states

img

ஏஏஏஏ...ஆசை மச்சான்...

ஏஏஏஏ..மோடி மோடி
ஏஏஏஏ..அமீத்து ஷா
உங்க ரெண்டு பேரையும் 
கழுவி ஊத்துறாங்களே
வலைதள தண்டவாளத்துல
வண்டவாளம் ஏத்துறாங்களே....                          (ஏஏஏஏ)

ஏஏஏஏ.. மோடி மோடி
ஏஏஏஏ..திருட்டு மோடி
பொய் வடைகள்
சுட்டு ஏமாற்றி
பிஎம் ஆனதை
நக்கல் அடிக்கிறாங்களே-மக்கள் அடிக்கிறாங்களே
பிஎம் ஆனபின்னே
பதவி தக்க வைக்க
வெறுப்பு அரசியலை
திட்டமிட்டு நடத்தினீர்களே
சிறுபான்மை மக்களுக்கு
சொல்லொணாத் துயர் தந்தீர்களே
இனியும் ஏமாறத்
தயாரில்லை இந்திய வாக்காளர்களே
..(ஏஏஏஏ)
ஏஏஏஏ..அமீத்து ஷாவே
ஏஏஏஏ.. அமீத்துஷாவே
அராஜக அமைச்சரே அமீத்து அதர்ம ஷாவே
குஜராத்து 
மண்ணில் மோடிக்கூட
சேர்ந்துக்கிட்டு மூவாயிரம் முஸ்லிமை
கொன்று குவிச்ச
கதையை உலகே அறியுந்தானே
பிபிசி ஆவணப்படத்தை
உலக மக்கள்
கண்டு காறித் துப்பினாங்களே-மக்கள் தூற்றினாங்களே
(ஏஏஏஏ)
ஏஏஏஏ மோடி மோடி
ஏஏஏஏ அமீத்து ஷா
பி.எம். கேர் ஃபண்டு
பேரில் கோடிகோடியாய்
சுருட்டியது நியாந் தானா 
சொல்லுங்களே மக்களுக்கு
வித்தியாச மான கட்சியின்னா இதுதானா
மோடி நாடகத்தில் 
கள்ளத்தனம் இதுதானே
ஆகாத அரசியலின் தலைவர்களை 
ரெய்டு நடத்தி  பேரம் பேசும் 
பித்தலாட்ட கூட்டந்தானே
உங்க கூட்டணியை
நெட்டிசன்க கலாய்க்கிறாங்களே.
(ஏஏஏஏ)
ஏஏஏஏ மோடி மோடி
ஏஏஏஏ அமீத்துஷா
அம்பானி அதானிக்காக
ராவுபகல் உழைச்ச கதை மறந்து போச்சா
மக்கள் ஏமாளியாச்சா
பொதுத் துறைகள் 
அடிமாட்டு விலைக்கு வாங்கி
அம்பானி அதானி எல்லாம்
கொழுத்த கதை தெரிந்த கதை
(ஏஏஏஏ)
ஏஏஏஏ மோடி மோடி 
ஏஏஏஏ அமீத்துஷா 
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் உரிமையெல்லாம்
பறிச்ச கதை மறந்து போச்சா  
பத்து ஆண்டா தேர்தலே நடத்தாம
சொந்த மாநிலத்தின் அகதி மக்களாக்கி
நீங்கள் படுத்துறீங்களே கொடுங்கோல் அரசை 
இங்கே நடத்துறீங்கள...                                      (ஏஏஏஏ)

ஏஏஏஏ மோடி கேடி ஏஏஏஏஅமீத்து ஷா ரெண்டு பேரும்
முட்டை கட்டி கிளம்ப ரெடியா ரெடியா
ஆர்எஸ்எஸ்  கூடாரந்தான்
காலி செய்ய ரெடியா ரெடியா
நீங்க ரெண்டு பேரும் எடுக்க வேணும் ஓட்டம்
அதுக்குத்தானே நாட்டில்
தேர்தலில் புகட்டும் பாடம்...                                  (ஏஏஏஏ)