- மித்ரோன்.. ! எனக்கு எப்போதுமே உங்களுடன் நேரடியாக உரையாடுவது பகுத் பசந்த் ஹை ! பத்திரிகை நிருபர்களை எனக்கு அறவே பிடிக்காதுங்கறது உங்களுக்குத் தெரியும்.. ஏன்? காரணம், அவங்க கேள்வி கேட்கறதுதான்.. நீங்களும் அதைப் புரிஞ்சுக்குங்க.. நான் சொல்றது மனசிலே ஆச்சா?
- என்னுடைய தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருப்பது உங்களுக்கு நல்லாத் தெரியும்.
- 2047-ஐப் பத்தி இப்பவே நாங்க யோசிக்க ஆர மிச்சுட்டோம். 2047-ல் இந்தியா உலக வல்லரசு ஆயிடும். அப்படி அறிவிப்பதற்கான அனுமதியை இப்பவே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்.. கிட்ட வாங்கிட்டேன். அப்ப நான் விஷ்வகுரு ஆயிடுவேன். எங்களோட அதிகார பீடத்தைக் காலி செய்ற உத்தேசமே எங் களுக்குக் கிடையாதுங்கறதை நீங்க தெரிஞ்சுக்கங்க…
- ஏதாவது கூட்டத்திற்குப் போகும்போது, மேடையில நின்னு மக்களைப் பாத்து நான் கையசைக்கறப்போ நீங்க ஒண்ணைக் கவனிச்சுருப்பீங்க. நான் மட்டும்தான் கையசைப்பேன். பக்கத்தில நிக்கற ஜே.டி. நட்டாவோ கேடி புட்டாவோ பேசாமதான் நிக்கணும். தாங்களும் கை தூக்கணும்னு யாராவது நெனச்சா அவங்க பிஜேபியைவிட்டு ஓடிரணும்.. அது அவங்களுக்கு நல்லாத் தெரியும்..
- 2024, 2029, 2034.. பத்தியெல்லாம் நான் நம்பிக்கையோட இருக்கறதுக்குக் காரணம் என் மேலே வச்சிருக்கற நம்பிக்கை இல்லே.. எதிர்க்கட்சிகள் மேலே வச்சிருக்கற நம்பிக்கைதான். ராகுல் காந்தியோட பாத யாத்திரை கேரளாவைத் தாண்ட எவ்வளவு நாட்கள் ஆவுது பாருங்க. அப்ப அவர் எங்களுக்கு எதிரா யாத்திரை நடத்தறாரா, இடது முன்னணி அரசுக்கு எதிரா நடத்த றாரா? கெஜ்ரிவால், மாயாவதி, மம்தா பத்தியெல்லாம் சொல்லவே வேணாம். இவங்களையெல்லாம் ஒண்ணு சேர்க்க யெச்சூரியும் அவரைச் சேர்ந்தவங்களும் முயற்சி பண்ணிப் பாக்கறாங்க… என்ன நடக்குதுன்னு பாத்துடுவோம்,,
- ஆர்.எஸ்.எஸ். பத்தி இந்தியாவில மக்கள் யாரும் சரியாப் புரிஞ்சுக்கலை. புரிஞ்சிருந்தா எங்களுக்கு இவ்வ ளவு பேரு ஆதரவு தருவாங்களா? தேர்தல் களத்திலே மட்டும் நாங்க போராடலை.. அரசியல் தளத்தில, கலாச்சாரத் தளத்திலயும் போராடறோம். கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சாமியார் மடங்கள், அனைத்து சாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், சிபிஐ, அமலாக்கத் துறை, உளவுத் துறை… என எல்லா இடத்திலேயும் ஊடுருவறது எப்படி.. தனியார் நிறுவனங்கள் கிட்டேருந்து நன்கொடை வாங்கறது எப்படிங்கற ரகசியம் எங்களுக்கு நல்லாத் தெரியும்.
- மதநல்லிணக்கம், மத ஒற்றுமைன்னு யாராவது பேசினாலே எனக்கு பத்திக்கிட்டு வருது. அப்படி பேசற வங்களுக்கு எதிரா நாங்க அணி திரட்டுவோம், பேரணி நடத்துவோம். நீதிமன்றங்கள் எதுக்கு இருக்கு? எல்லாப் பேரணிகளையும் தடை பண்ணுவாங்க. மற்ற வங்கள்லாம் நீதிமன்றங்கள் சொன்னாக் கேப்பாங்க. நாங்க தடையை மீறி ஊர்வலம் போவோம். அதுவும் மசூதி வழியாப் போவோம். வாகனங்கள் மேலே பெட்ரோல் ஊத்தி எரிப்போம். பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மேலேயும் நல்லிணக்கம் பேசறவங்க மேலேயும் போடுவோம். காவல் துறை அவங்களைக் கைது பண்ணும். எங்களை விட்டுரும். அவங்க நீதிமன்ற த்திலே வழக்கு போடுவாங்க.. உயர்நீதிமன்றங்கள் அவற்றைத் தள்ளுபடி பண்ணிடுவாங்க. அவங்க உச்சநீதி மன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குப் போவாங்க. உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளையெல்லாம் தள்ளு படி பண்றதோட அவங்க நேரத்தை வீணாக்கினதுக்காக அபராதம் வேற போடுவாங்க.
- அதே மாதிரி தனி மனித உரிமை பத்திப் பேசறவங்க மேலே உபா, கிபான்னு இருக்கற சட்டங்களைப் போடு வோம். சிறையிலே தள்ளுவோம். அவங்க வெளியே வரது இருக்கட்டும், ஜாமீன்ல வெளியே வரக் கூட முடியாது. ஸ்டான் சுவாமி, சித்திக் கப்பன் கேசை யெல்லாம்தான் எல்லாரும் பாத்தீங்களே..? l படேல் சிலையைத் திறந்து வச்சு நாங்க அமர்க்களம் பண்ணதை மறந்திருக்க மாட்டீங்க.. இப்ப நேதாஜி சிலை யைத் திறந்து வச்சுட்டு அந்தச் சிலை “இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறை சாற்றுகிறது.. நேதாஜி யின் கனவுகளை பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறது” - ன்னு அளந்து விட்டேன். அளந்து விடறது எனக்கு குலோப் ஜாமுன் சாப்பிடறது மாதிரி..
- என்னென்ன கனவுகளைன்னுதான் யாரும் என்னைக் கேட்க முடியாதே? l பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே கிங்ஸ் வே என்று அழைக்கப்பட்ட ராஜபாதையை “கர்தவ்ய பாத்”னு பேரை மாத்தி வச்சுட்டேன். பேரை இந்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலயோ மாத்தி வைக்கறது எனக்கு அல்வா சாப்பிடறது மாதிரின்னு உங்களுக்குத்தெரியும்..
- இந்த மாதத்திற்கு இந்த கப்சா போதும்னு நெனக்க றேன். அடுத்த ஜன் கீ பாத் அடுத்த மாதம்.. டீக் ஹை..?
- ராஜகுரு